தனியார் மயமாகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் வழங்க ஒப்பந்தம் வெளியிட்டது ஒன்றிய அரசு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

டில்லி,ஆக.9- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் தனியார் மயமாகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.

தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்திற்காக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. குலசேகரப்பட்டி னத்தில் ரூ. 986 கோடியில் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின் றன. 2,233 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை ஒன்றிய அரசின் விண்வெளித் துறை மேற்கொண்டு வருகிறது. குலசேகரப் பட்டினத்தில் அமையும் ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியது.

ராக்கெட் ஏவுதளத்தை தனியாரிடம் வழங்க ஒன்றிய அரசின் இன்-ஸ்பேஸ் நிறு வனம் ஒப்பந்தம் கோரியது. குலசேகரப் பட்டினம் ஏவுதளத்தில் இருந்து சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடியும். நாட்டின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு வழங்கப்பட இருப்பதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *