சென்னை, செப். 25- பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் லதா, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு;
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான முதல் பருவம் மற்றும் காலாண்டுத் தேர்வு கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்த தேர்வுகள் இன்றுடன்(செப்டம்பர் 25) நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5-ஆம் தேதி திறக்கப்படும்.
சிறப்பு வகுப்புக்குத் தடை
இதுதவிர, இந்த காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லக்கூடாது.
விடுமுறை நாட்கள் மழைக்காலமாக இருப்பதால் பாதுகாப்பு சார்ந்த அறிவுரைகளை தலைமை யாசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
