‘நீட்’ போராட்ட எதிரொலி பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய 15 வயது சிறுமி மீது வழக்காம்! ஒன்றிய அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்!

1 Min Read

புதுடில்லி, ஆக.3- டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய நீட் தேர்வு தொடர்பான போராட்டம் நாடு முழுவதும் பரவிய நிலையில், மாணவர் போராட்டங்கள் மீது காவல் துறையினர் பலப்பிரயோகம் செய்த தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மாணவர் மீது கட்டாயக் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், குற்றப் பின்னணி இல்லாதவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான முழக்கங்களை எழுப்பிய 15 வயது சிறுமி மீது நொய்டா மற்றும் டில்லி காவல் துறையினர் பாரதிய நியாய சன்ஹிதாவின்  கீழ் வழக்குப் பதிவு செய் துள்ளனர்.

பிரதமர் மோடி தன்னை அவதூறாகப் பேசியவர்களை மன்னிக்க விரும்புவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியும் தேசத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரி காணொலியை வெளியிட்டார்.

சிறுமி மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பாஜக அய்டி பிரிவு மற்றும் தலைவர்கள் மீதான பழைய விவகாரங்களைச் சுட்டிக்காட்டியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *