அமெரிக்கா – நியுசெர்சி மாநிலத்தில் நடைபெற்ற திராவிடம் வெல்லட்டும் – திராவிட நாள் கருத்தரங்கம் பெரியார் பிறந்த நாள் நடை ஓட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

நியூஜெர்சி, செப். 22- அமெரிக்காவில் முதல் முறையாக நியுசெர்சி மாநிலத்தில் அமெரிக்கத் தமிழர்களால் செப்டம்பர் மாதம் 19 & 20 தேதிகளில் “திராவிட நாள்” கருத்தரங்கு “திரைகடல் ஓடியும் திராவிடம் தேடு” என்னும் கருப்பொருளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இக்கருத்தரங்கையொட்டி அமெரிக்காவில் நியுசெர்சி, சிகாகோ, அட்லாண்டா, டாலஸ், சான்பிரான்ஸ்கோ, வாசிங்டன் டிசி ஆகிய நகரங்களில் பெரியார் பிறந்த நாள் நடை ஓட்டமும் நடைப்பெற்றது.

அமெரிக்காவில் இயங்கும் திராவிட அமைப்புகளான வெளி நாடு வாழ் தமிழர் இந்தியர் நலச் சங்கம் (NRTIA – USA), பெரியார் பன்னாட்டமைப்பு, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (PASC) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய “திராவிட நாள்” கருத்தரங்கில் மூத்த ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் இக்கருத்தரங்கைக் குழுவின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன், செயலாளர் நியுசெர்சி பாலா, பொருளாளர் இரவி பெருமாள்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

செப்டம்பர் மாதம் என்பது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள், அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள், திராவிட முன்னேற்ற கழகம் துவங்கிய நாள் என பலச் சிறப்புகளை கொண்டது.

கருத்தரங்கைத் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி திராவிடத்தின் சிறப்புகளைக் கூறி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கிற்குத் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழர்கள் திராவிடத்தை நாட வேண்டியது அவசியம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் “இன்றைய சூழலில் அனைவரும் திராவிட கொள்கைகளை, தமிழர்கள் அடைந்த பயன்களை நாம் அனைவருக்கும் எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதையும் திராவிடம் வெல்லட்டும்” எனவும் கூறி வழங்கிய வாழ்த்து செய்திகளும் ஒளிப்பரப்பட்டன.

கருத்தரங்கில் பத்து வயது நிரம்பிய ஆதவன் “We are Dravidians” என்னும் தலைப்பில் பேசினார்.

திராவிட இனத்தின் வரலாற்றை அயோத்திதாச பண்டிதர் காலத்திலிருந்து, நீதிக் கட்சி, தந்தை பெரியார், திராவிடர் கழகம், அறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளையும், தமிழினத்திற்க்கும், தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்க்கும் ஏற்பட்ட பயன்களை அம்பேத்கர் கிங் ஸ்டி சர்க்கிள் அமைப்பை சேர்ந்த கார்த்தி, மருத்துவர் சோம இளங்கோவன்,  ம.வீ.கனிமொழி, நியுசெர்சி பாலா, இரவி பெருமாள்சாமி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்.

குழந்தைகள் திராவிடத் தலைவர்களை ஓவியமாக்கும் போட்டி நடைபெற்றது. இளம் பருவ வயதின ரான சிகாகோ ஹரி, லண்டன் மீரா ஆகியோர் திராவிட இனத்தின் கொள்கைகளையும் அதன் சிறப்புகளையும் இக்காலத் தலைமுறைக்கு ஏற்றவாறு சமூக வலைத்தளங்களில் செயல்படுவதை விரிவாக எடுத்துரைத்தனர்.

இறுதியாக தமிழ் கேள்வி செந்தில்வேல் திராவிட இயக்கங்களால் தமிழ்ச் சமூகம் அடைந்த பயன்களை, அதன் கொள்கைகளை நம் குடும்பத்தில் பேச வேண்டிய அவசியத்தையும், அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டிய கடமையும் நம் அனைவருக்கும் இருப்பதை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இக் கருத்தரங்கிற்கு லண்டன், அமெரிக்காவின் நியுயார்க்,நியுசெர்சி,டெலவேர், பென்சில்வேணியா, விர்ஜீனியா, கரோலினா, மில்வாக்கி, டாலஸ் ஆகிய மாநிலகளிலிருந்து அமெ ரிக்க தமிழர்கள் குடும்பங்களோடு கலந்து கொண்டனர்.

இறுதியாக இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அமெரிக்காவில் நடத்து வோம் என்றும், திராவிடக் கொள்கைகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வோம் என ஒவ்வொருவரும் உறுதி கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *