பக்தியை வென்ற அறிவியல்: வைஷ்ணவி தேவி ‘யாத்திரை’ ரத்து!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஜம்மு, ஜூலை 20 இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேரிடர்களின் போது மக்களின் உயிரைக் காப்பது மத நம்பிக்கைகளோ அல்லது கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களோ அல்ல; மாறாக, மனிதர்களின் பகுத்தறிவும், அறிவியல் பூர்வமான எச்சரிக்கைகளும், அரசாங்கத்தின் திட்டமிடலுமே என்பதை ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள  வைஷ்ணவி தேவி கோயிலுக்குத் நாள்தோறும் 30,000 முதல் 40,000 பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். இந்த நிலையில், அங்கு பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலர் உயிரிழந்துள்ள நிலையில், தற்காலிகமாக இந்த ‘யாத்திரை’ நிறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை விதிகளுக்கு
மதம் கிடையாது

மக்களால் ‘‘மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்’’ என்று போற்றப்படும் ஒரு கோயி லுக்குள்ளேயே, இயற்கையின் சீற்றத்தால் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகள் புவியியல் மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படுபவை. அவை மனிதன் உருவாக்கிய மதங்களையோ, கடவுள் நம்பிக்கைகளையோ பார்த்துத் தன் பாதையை மாற்றிக் கொள்வதில்லை.

ஆபத்துக் காலங்களில் பக்தர்களைக் காப்பாற்ற எந்தவொரு அதீத சக்தியும் வருவதில்லை. நிலச்சரிவு ஏற்பட்டால் அங்குள்ள சிலைகளும், கோயில்களும் கூட மண்ணோடு மண்ணாகப் புதையும் என்பதை முந்தைய உத்தராகண்ட் (கேதார்நாத்) பேரிடர்களே நமக்கு உணர்த்தியுள்ளன.

நடைமுறையில் நடப்பது என்ன?

பக்தர்களின் நம்பிக்கையின்படி தெய்வம் எல்லாவற்றையும் விடச் சக்தி வாய்ந்தது என்றால், ஆபத்தான நேரத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டியது அந்த தெய்வத்தின் கடமையல்லவா? ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன?

இந்திய வானிலை ஆய்வு மய்யம் தனது அறிவியல் கருவிகள் மூலம் வானிலையைக் கணித்து எச்சரிக்கை விடுக்கிறது.

மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி, ‘யாத்தி ரை’யைத் தடை செய்கின்றன.

பகுத்தறிவுப் பார்வை

கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தின் சக்தியை விட, கண்ணுக்குத் தெரிந்த மனித உயிர்களைக் காக்கச் சட்டம் போடும் மாநில அரசு மற்றும் அறிவியல் வழிநடத்தும் நிர்வாகமே இங்கு உண்மையான சக்தி வாய்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.

ஆபத்து வரும்போது ‘‘தெய்வம் காக்கும்’’ என்று மூடநம்பிக்கையோடு மலையேறாமல், அரசாங்கத்தின் எச்சரிக்கையை ஏற்றுப் பக்தர்கள் தங்களின் பயணத்தைத் தவிர்ப்பதே பகுத்தறிவின் அடையாளம்.

மத நம்பிக்கைகள் ஒருவிதமடமைத்தனமே ஆகும், இயற்கைப் பேரிடர்களில் இருந்து மனிதர்களைக் காப்பது அறிவியலும், அரசாங் கத்தின் முறையான நிர்வாகமும் மட்டுமே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *