புதுடில்லி, ஜூன் 26 ஒன்றிய அரசை நோக்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நாட்டில் இதுவரை தொண்ணூறு முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான மாண வர்களின் எதிர்காலம் முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக இதுவரை 20 மாணவர்கள் மன முடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போய், தவித்துக் கொண்டிருக்கின்றன.”
இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடந்தபோதிலும், மோடி அரசின் கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டு விலகாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்று கார்கே சாடியுள்ளார். மேலும், ஒன்றிய அரசின் கல்வி முறைகேடுகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடும் மாணவர்கள் ஊடகங் களுக்கு அளிக்கும் பேட்டிகளை, ‘பயங்கரவாதிகளின் குரல்’ என்று அவர் முத்திரை குத்துவதாகவும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதை நினைவுகூர்ந்த கார்கே, “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, விவசாயி களை அவமதிக்கும் விதமாக, அவர்களை ‘போராட்டத்தை வாழ் வாதாரமாகக் கொண்டவர்கள்’ என்றும், ‘ஒட்டுண்ணிகள்’ என்றும் வர்ணித்ததை இந்த நாடு இன்னும் மறக்கவில்லை.
இந்த அரசாங்கத்தின் தவறு களைத் தட்டிக்கேட்கும் மற்றும் கேள்வி கேட்கும் யாராக இருந்தா லும், அவர்களை ‘தேச விரோதிகள்’ என்று அழைப்பதே இந்த அரசின் வழக்கமாக உள்ளது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவரின் இந்த கார சாரமான பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
