உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!

1 Min Read

சென்னை, ஜூன் 25- அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நேரடி நியமனங்கள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

விதிமுறைகளின்படி நியமனம்: 2025ஆம் ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன நடைமுறைகள் அனைத்தும், அரசின் உரிய அரசாணை விதிமுறைகளின்படியே துல்லியமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நம்பகத்தன்மை உறுதி

இந்த நியமன செயல்முறைகள் யாவும் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்வர்களின் தகுதியை உறுதி செய்ய, அவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சான்றிதழ் சரிபார்ப்பின் (Certificate Verification) போது நேரடியாகவும், மிகக் கவனமாகவும் ஆய்வு செய்யப்படுகின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *