25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார் கோயில் சன்னதி தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒன்றில் தமிழர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் புராண வரலாற்றை கண்டு மனம் வருந்தினார். ராவணன் தங்கை சூர்ப்பனகையை ராமன் தம்பியாகிய இலட்சுமணன் அவள்கொங்கையைவாளால் துண்டிக்கும்செயல் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருந்தது. இது கண்டு வெட்கமும் வேதனையும் ஆத்திரமும் படாத தமிழர் சமுதாயத்தின் நிலை கண்டு வருந்தினார்.
