செயற்கை நுண்ணறிவு கருவி எதுவாக இருந்தாலும் தகுதியுள்ள விரிவுரையாளருக்கு இணையாக முடியாது! உயர் நீதிமன்றம் கருத்து

1 Min Read

  சென்னை, ஜூன் 20- போதுமான வருகைப்பதிவு இல்லாததால் பருவகாலத் (செமஸ்டர்) தேர்வெழுத அனுமதி மறுத்ததுடன், குறிப்பிட்ட அந்த கல்வி யாண்டை மீண்டும் படிக்க வேண்டும் என்று தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து சதீஷ் சாம் உள்ளிட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன் றத்தின் தனி நீதிபதி, தேர்வெழுத அனுமதி மறுப்பு மற்றும் மீண்டும் ஓராண்டை படிப்பது உள்ளிட்ட விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்கலைக் கழகத்திற்்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் மற்றும் சீர்மிகு சட்டப் பள்ளி தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப் ரமணியம், என்.செந் தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போதைய விதிகள் தெளிவாக உள்ளதாக கூறி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், கடுமையான போட்டிக்கு மத்தியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் மிகவும் கஷ்டப்பட்டு இடங்களை பெறுகிறார் கள்.

அந்த இடங்களின் மதிப்பை அவர்கள் உணர வேண்டியது அவசியம். இணையதள வகுப்புகள் ஒருபோதும் நேரடி கற்றல் முறைக்கு மாற்றாக முடியாது.

அதேபோல சாட்ஜி.பி.டி மற்றும் வேறு எந்த செயற்கை நுண்ணறிவு கருவியாலும் தகுதியான ஒரு விரிவுரையாளருக்கு இணையாக முடியாது.

செயற்கை நுண்ணறிவு என்பது மனித நுண்ணறி வுக்கு மிக நெருக்கமாக வர முடியும். ஆனால் நேர்மை, ஒழுக்கம், நெறி முறை ஆகியவற்றை கற்றுத்தர முடியாது.

இந்தப் பாடங்களை வகுப்பறையில் மட்டுமே கற்கமுடியும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *