மும்பை, ஜூன் 17 கைப்பேசி பயன்பாட்டுக்கு எதிராக சிறுவர்கள் உடல் தகுதி, ஒழுக்கம், மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் 4 ஆம் வகுப்பு மாணவன் 16 கி.மீ. தூரம் பள்ளிக்கு ஓடிச்சென்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினான்.
நவீன உலகில் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் ஒளிப்ப டம் எடுப்பது, அதனுடைய குறும்புத்தனமான காட்சிப் பதிவு களை ‘ரீல்ஸ்’ எடுப்பது என கைப்பேசிகளோடு குழந்தைகளுக்கு அப்போதே தொடர்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். முன்பெல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்குச் சோறு ஊட்ட நிலாவை காட்டுவது, காக்கா கதை சொன்னார்கள். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கும். சமாதா னப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக கைப்பேசி மாறிவிட்டது.
கைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு காரணமாக குழந்தைகளுக்கு மன இறுக்கம் ஏற்பட்டு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாக குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கைப்பேசி பயன்பாட்டில் இருந்து தடை விதிப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள் தீவிரமாக ஆலோ சித்து வருகின்றன. மேலும், உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகளில் கைப்பேசிப் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைப்பேசியி லேயே மூழ்கிக் கிடப்பதற்குப் பதி லாக உடல் தகுதி, ஒழுக்கம், மன உறுதி ஆகியவற்றை உணர்த்தும் வகையிலும், வெளிப்புற செயல்பா டுகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதை ஊக்குவிக்கும் வகை யிலும் மகாராட்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கான காப்பகத்தில் இருக்கும் 4 ஆம் வகுப்பு மாணவன் அரவிந்த் ரத்தோடு (வயது 10) பள்ளிக்கு செல்லும் முதல் நாளன்று 16 கி.மீ. தூரம் ஓடியே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினான்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நாடோடி இன குழுக்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் ஒரு காப்பகத்தில் அர விந்த் ரத்தோடு தங்கி உள்ளான். முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வ லர்கள், ஓட்டப்பந்தய வீரர்களின் முன்னிலையில் இந்த ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அந்தச் சிறுவனை பாராட்டி னர்.
