அமெரிக்க விமானம் தரையில் விழுந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

1 Min Read

வாசிங்டன், ஜூன் 15- அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 12 பேர் பயணித்தனர்.
விமான விபத்து
இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்த விமானம் சில நிமிடங்களில் அப்பகுதியில் உள்ள சாலை அருகே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி உள்பட 12 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *