கொல்கத்தாவில் கட்டுமானக் கிடங்கு இடிந்து விபத்து! உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

1 Min Read

கொல்கத்தா, ஜூன் 29- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் தரதலா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வணிகச் சேமிப்பு கிடங்கு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து தரைமட்டமானது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக நேற்றும் தீவிரமாக நடைபெற்றது.

மீட்புக் குழுவினர் தொடர்ந்து எஞ்சியிருப்பவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காலேக் சர்தார் என்பவர், சிகிச்சை பலனின்றி (27.6.2026) நேற்று பரிதாப மாக உயிரிழந்தார்.

இதன் காரணமாக, இந்த கொடூர கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், காயமடைந்த 17 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை அறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *