கொல்கத்தா, ஜூன் 9 மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடனே ஆக்கிர மிப்பு என்ற பெயரில் முஸ்லிம், தலித் மக்களின் வீடுகள், கடைக ளை புல்டோசர் மூலம் தொடர்ச்சி யாக இடித்து வருகிறது. இதுதான் பாஜக அரசின் முதல் பணியாக உள்ளது. இந்த புல்டோசர் அடா வடிக்கு எதிராக மேற்கு வங்கம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைமையில் இடது சாரிக் கட்சிகள் மாபெரும் பேரணி யுடன் தொடர் போராட்ட இயக் கத்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே ஜாதவ்பூர் ரயில் நிலையப் பகுதி யில் 7.6.2026 அன்று நள்ளிரவில் நடை பாதை வியாபாரிகளின் கடைகள், இருப்பிடங்களை புல்டோசர் மூலம் அகற்றும் நடவடிக்கையை அம் மாநில பாஜக அரசு காவல்துறை, ஒன்றியப் படைகளின் பாதுகாப்புடன் மேற்கொண்டது. தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரிக் கட்சி தலைவர்கள், ஊழியர்கள், சிஅய்டியு ஆதரவு பெற்ற உள்ளூர் நடைபாதை வியாபாரிகள் சங்கங்கள், ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாண வர்கள் என பெரும் படையினர் புல்டோசர் நடவடிக்கைகளை நேரில் தடுத்து நிறுத்த சம்பவ இடத்திலேயே களத்தில் இறங்கி போராடினர்.
புல்டோசர்களுக்கு முன்பாக நேரடியாக அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். மேலும் பாஜக அரசின் தொடர் அடாவடிக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் மாணவர்கள் இயந்திரங்களின் மீதும் ஏறி நின்று முழக்கமிட்டனர். அமைதியாக நடைபெற்ற இந்த மக்கள் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை தடியடி நடத்தியது. இந்த தாக்குதலில் இடதுசாரி தலைவர்கள், ஊழியர்கள், மாண வர்கள் மற்றும் வியாபாரிகளுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக சுமார் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நடிகரும், சமூக ஆர்வலருமான ஜோய்ராஜ் பட்டாச்சார்யா பலத்த காயம் அடைந்து, கே.பி.சி மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒருவர் கவலைக்கிடம்
இந்த தாக்குதல் தொடர்பாக போராட்டத்தில் பங்கேற்ற நடை பாதை வியாபாரி ஒருவர் “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளித ழுக்கு அளித்த பேட்டியில்,”இந்திய மாணவர் சங்க தலைவர் சிறீஜன் பட்டாச்சார்யா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினரும், ஜாதவ்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுஜன் சக்ரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். ராம்கர் பகுதியைச் சேர்ந்த ரித்தப்ரதா கோஷ் என்பவர் காவல்துறை தாக்குதலில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் உள்ளார்” என அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி நேற்று (8.6.2026) அதிகாலை 3 மணி அளவில் ஜாதவ்பூர் பல்க லைக்கழகத்தின் 4ஆவது நுழை வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாண வர்கள் போராட்டத்தைத் தொடங்கி னர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
