மகாராட்டிராவில் பயிற்சி மய்ய நிறுவனர் கைது

புதுடில்லி, மே 19 நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஅய் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்ெகனவே மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மகாராட்டிராவின் லடூரில் ரேணுகா கேரியர் சென்டர் என்ற பெயரில் ‘நீட்’ பயிற்சி மய்யம் நடத்திய வந்தவரான சிவராஜ் ரகுநாத் மேட்டோகான்கர் என்பவரின் வீட்டில்  அண்மையில் சிபிஅய் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அவரது கைப்பேசியில் கசிந்த நீட் வினாத்தாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து நீட் தேர்வுக்கு முன்னதாக சுமார் 10 நாட்களுக்கு முன் ஏப்ரல் 23ஆம் தேதி சிவராஜ் வினாத்தாள் மற்றும் அதற்கான விடையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *