பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு! நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read

சென்னை, ஜூன் 8- குடும்பத்தினராலேயே கொடூரமான முறையில் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப் பித்துள்ளது.

வேலூர் மாவட்டத் தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், அவர் களின் சொந்தக் குடும் பத்தைச் சேர்ந்த ஆண் களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றம், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் நான்கு பேரில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் (தலா ரூ.1.50 லட்சம் அபராதம்), மற்ற இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் (தலா ரூ.30 ஆயிரம் அபராதம்) விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக தலா ரூ.25 ஆயிரமும், அபராதத் தொகையான ரூ.3.60 லட்சத்தைப் பகிர்ந்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விசாரணை நீதிமன்றம் விதித்த இந்த இழப்பீட்டுத் தொகை தங்களுக்குப் போதுமானதாக இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாய் சென்னை உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள தாவது:

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகத் தமிழ் நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை, பெண் குழந் தைகளுக்கு மட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கும் முழுமையாகப் பொருந்தும்.

இந்த அரசாணை யின்படி பாதிக்கப் பட்டவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வழிவகை உள்ளது. இதனைப் பின்பற்றி உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடாததன் மூலம் விசாரணை நீதிமன்றம் தவறிழைத்துவிட்டது.

நீதிமன்ற உத்தரவு

“பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக தமிழ் நாடு அரசின் சமூக பாதுகாப்புத் துறை வழங்க வேண்டும்.

ஏற்கெனவே அவர்களுக்கு வழங்கப் பட்ட இடைக்கால இழப்பீட்டுத் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை இன்னும் 30 நாட்களுக்குள் வழங்கி முடிக்க வேண்டும்.”

சொந்தக் குடும்பத் தினராலேயே சிறுவர்கள் பாதிக்கப்பட்ட இந்த கொடூர வழக்கில், உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும் பத்திற்கு ஓரளவிற்கு நீதியையும், ஆறுதலையும் தேடித்தந்துள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *