‘கோவிலில் வழிபாட்டு உரிமை அனைவருக்கும் சமமானது’ மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

1 Min Read

மதுரை, மே.2-  திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அயன்ரெட்டிய பட்டியை சேர்ந்த கந்தசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தில் உள்ள உலக நாயகியம்மன் மற்றும் முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை  விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 10 நாட்கள் சித்திரை  விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு எங்களிடம் வரி வசூலிக்கக்கூடாது என கிராமத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த கோவிலில் வழிபாடு செய்யவும் அனுமதிப்பதில்லை. கிராமப் பொது கோவிலில் எந்தவித வேறுபாடும் இன்றி அனைவரும் வழிபாடு செய்யலாம் என அரசியலமைப் புச்சட்டம் கூறுகிறது. அதன்படி எங்கள் குடும்பத்தினரிடம் சித் திரை திருவிழாவுக்கான வரியை வசூலிக்கவும், கோவிலில் தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அதி காரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், ‘‘கோவில் வழிபாட்டு உரிமை என்பது அனைவருக்கும் சமமானது. இதில் யாரையும் ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது. எனவே மனுதாரர் குடும்பத்தினரிடம் வரிவசூலித்து, வழிபாட்டுக்கு அனுமதிப்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *