அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்மீது சி.பி.அய். விசாரணை உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 8 தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த ரிட் மனுவில், தவெக  கட்சி மற்றும் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குதிரை பேரம்

மனுவில் கூறப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது பதவிகளை திடீரென பதவி விலகி தவெக இணைந்துள்ளனர். இது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரான செயலாகும்.

இந்த விவகாரத்தில் தவெக என்ற கட்சி மிகப்பெரிய அளவில் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபட்டு, சட்ட விரோதமாக இந்த சட்ட மன்ற உறுப்பினர்களைத் தன் வசப்படுத்தி யுள்ளது.

எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்கள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பின்வருபவர்கள் எதிர்மனு தாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்:

ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்திய தேர்தல் ஆணையம் சிபிஅய் தமிழ்நாடுஅரசுதமிழ்நாடுசட்டமன்ற பேரவைத் தலைவர் தவெகழகத்தின் பொதுச்செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  (மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா).

“குதிரை பேரத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகா ரத்தைப் பயன்படுத்த வேண்டும்.”

சிபிஅய் விசாரணை

தவெகழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் குற்றச் சாட்டுக்கு உள்ளான 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது சிபிஅய் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

தேர்தல் முடிந்த பிறகு, எவ்வித நியாயமான காரணமும் இன்றி பதவியை விட்டு விலகல் அல்லது சட்டமன்ற பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்படும் உறுப்பினர்கள், மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் தனது சிறப்புப் அதிகாரமான பிரிவு 142-அய் பயன்படுத்தி கடுமையான புதிய விதிகளை உருவாக்க வேண்டும்.

நீதிமன்றம் புதிய விதிகளை உருவாக்கும் வரை, சம்பந்தப்பட்ட 4 முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்களும் சுயேச்சையாகவோ அல்லது வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவிலோ இடைத் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த மனு, விரைவில் உச்ச நீதிமன் றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *