கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.6.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப் பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக போராட்டம்: டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி முற்றுகை.

* நம்முடைய தயவோடு நடைபெறும் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி எடுப்போம்: அதிமுகவினர் திமுகவில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.

* நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு. சென்னையில் கேஸ் சிலிண்டர் ரூ.957.50க்கும் டெல்லியில் கேஸ் சிலிண்டர் ரூ.942க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் 2வது முறையாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு முன்னதாக, பாஜகவுடன் சிபிஅய்-எம் கட்சி ‘ஒப்பந்தம்’ என தேர்தல் பரப்புரையில் ராகுல் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு காங்கிரஸிடம் சிபிஅய் (எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம். இந்தக் கடிதத்தின் பிரதிகள் மற்ற இந்தியா கூட்டமைப்புக் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டன.

* ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை மராத்தா மாணவர்களுக்கும் விரிவுபடுத்தும் அரசாணையை (GR) மகாராஷ்டிரா அரசின் நடவடிக்கையால் ஓபிசி தலைவர்கள் அதிருப்தி.

தி டெலிகிராப்:

* சி.பி.எஸ்.இ.யின் மதிப்பெண் ஆய்வு முறை தொடர் பான சர்ச்சை: ‘பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன’; அமைச்சர் பிரதான் பதவியில் நீடிப்பது ‘அதிகாரத்தின் மீதான பற்றையே’ காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சனம்

டைம்ஸ் ஆப் இந்தியா:

* இந்தியாவில் 2020-க்குப் பிறகு மருத்துவ கவனிப்பு இன்றி நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, கிட்டத்தட்ட 50%-அய் எட்டியுள்ளது. இறப்பின் போது எந்த மருத்துவ உதவியும் பெறாதவர்கள் அல்லது பயிற்சி பெறாத ஒருவரால் மட்டுமே கவனிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரிவில் அடங்குவர். நடைமுறையில், இது பெரும்பாலும் வீட்டில் அல்லது வெளியில் முறையான மருத்துவ சிகிச்சையில் இறப்புகளை குறிக்கிறது,

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *