டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் தவெக; விஜய் அரசு மீது நடவடிக்கை: திமுக, அதிமுக, பாஜக அடுத்தடுத்து ஆளுநரிடம் நேரில் பரபரப்பு புகார்.
* தொகுதி மறுவரையறை மசோதா, சில மாற்றங்கள் செய்து மீண்டும் தாக்கல் செய்ய மோடி அரசு ஆலோசனை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அயோத்தி ராமன் கோயிலைப் போல் மோசடி; பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு: விசா ரணை குழுவை அமைத்தது கோயில் நிர்வாக கமிட்டி
* பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத் தொடர்; நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மத்தியப் பிரதேச அரசு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பாடப்பிரிவு தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள்கள் ‘காணாமல் போயின’. சம்பந்தப்பட்ட தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு.
தி இந்து:
* டில்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்து 15-ஆம் நாளாக போராட்டம். காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு வருகிறார். ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் மற்றும் சிபிஅய்(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் பங்கேற்று ஆதரவு.
* புதுடில்லியில் உள்ள ‘கான்ஸ்டிடியூசன் கிளப் ஆப் இந்தியா’வில் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல், கூட்டாட்சி மற்றும் குடியுரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், இத்திட்டமானது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில சட்டமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அவை தங்கள் விவகாரங்களை நிர்வகிக்கும் திறனைக் குறைத்து விடும் என்று பங்கேற்பாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
* சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை: காங்கிரஸ் எதிர்ப்பு. மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்கள் மீதான கொடூர தாக்குதல் என்றும், “மும்மொழித் திட்டத்தின் பெயரால் ஒன்றிய அரசு இந்தி அல்லது சமஸ்கிருதத்தை திணித்தால், அதற்கு பெரும் அரசியல் விலையைக் கொடுக்க நேரிடும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘பிரதமர் கடும் கோபத்தில் உள்ளார்’: தொகுதி மறுவரையறை மசோதா பின்னடைவுக்கு ‘பழிவாங்கவே’ பாஜக கட்சிகளை உடைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு. பல முயற்சிகள் செய்தும் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை; அதனால் இப்போது அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. உளவியல் ரீதியான விளையாட்டுகளை ஆடுவதில் அவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள்,” என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.
– குடந்தை கருணா
