கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தொடர் தோல்விகளால் கடும் அதிருப்தி அதிமுக இரண்டாக உடைந்தது: உண்மையான கட்சி நாங்கள் தான்: எடப்பாடி, வேலுமணி அணிகள் தற்காலிக பேரவைத் தலைவரிடம் தனித்தனியாக கடிதம். வேலுமணி அணிக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு. எடப்பாடி பக்கம் 17 பேர் மட்டுமே.

* பாஜக ஆளும் டில்லியில் டபுள் என்ஜின் சர்க்கார் சாகசம்: அசாம், பீகார் மாநில பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள். நான்கு பேர் கைது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஈரான் போரின் தாக்கத்தால் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க பிரதமர் கூறிய சிக்கன அழைப்பை மட்டும் மக்கள் மீது சுமத்துவது நியாயமல்ல; எண்ணெய் விலை குறைந்திருந்த காலங்களில் அதன் பலன் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தற்போது மட்டும் மக்களைத் தியாகம் செய்ய அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தலையங்கம் குறிப்பிடுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சிக்கன அறிவுரை தோல்விக்கான சான்று சமரசமடைந்த பிரதமர் மோடியால் இனி நாட்டை நிர்வகிக்க முடியாது: ராகுல் காந்தி கடும் தாக்கு.

* மேற்குவங்க தேர்தல் முடிவுகளில் சிறப்புத் தீவிர மறுஆய்வு தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், தீர்க்கப்படாத வாக்காளர் நீக்கங்களுக்கும் பாஜகவின் வெற்றி வித்தியாசத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கருத்து.

தி இந்து:

* மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலின் ‘சிறப்பு தீவிரத் திருத்தப் பணி’யின் (SIR) போது லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இது தேர்தல் முடிவுகளை “முக்கியமான அளவில் பாதித்தது” என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா முன்வைத்த குற்றச்சாட்டுகளை தாங்கள் பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் உறுதியளித்தது.

* சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர் உரிமைக்கு மிகப்பெரிய பின்னடைவு: காங். கருத்து. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்தவுடன், மோடி அரசு 4 புதிய தொழிலாளர் சட்டங்களை அறிவித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

* இந்த சட்டங்கள் தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் சூழலை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு கட்டமைப்பை செயல்படுத்தும் தேதியாக ஜூலை 1அய் ஒன்றிய அரசு அறிவித்தது. வி.பி.–ஜி ராம் ஜி. புதிய சட்டம் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். இதற்கான செலவுப் பகிர்வு முறை, ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே 60:40 ஆகவும், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு 90:10 ஆகவும், சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100% ஒன்றிய நிதியாகவும் இருக்கும்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *