உலகச் செய்திகள்

கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகள்: அமெரிக்கா புதிய விளக்கம்

வாசிங்டன், மே 31– அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு பெறும் விதிகளை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது. அதன்படி அங்கே தங்கியிருப்பவர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக மீண் டும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி, அங்கிருந்துதான் விண் ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.இது வெளிநாட்டினரை கடுமையாக பாதித்து உள்ளது. மேலும் இதற்கு உள்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து இந்த அறிவிப்பில் இருந்து அமெரிக்கா பின்வாங்கி உள்ளது. அதன்படி எல்லா வெளிநாட்டினரும் கிரீன் கார்டுக்காக அமெரிக் காவை விட்டு வெளியேற வேண்டியதில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புத்துறை விளக்கம்

அதாவது கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு மனுவையும் பொறுத்து அந்தந்த அதிகாரிகளே முடிவு செய்வார் கள் எனவும், கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஒருவரை அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டுமா என்பதை அந்தந்த அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் அல்லது பொது நல உதவிகளை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் போன்றவர்கள் மட்டுமே இந்த அறிவிப்பால் பாதிக்கப்படக்கூடும் என பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான்: அகதிகளை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு!

இந்தியா

காபூல், மே 31- பாகிஸ்தானில் இருந்து அகதிகள் சிலரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு வாகனம் ஒன்று திரும்பி கொண்டிருந்தது. அப்போது, ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், காபூல் நகரை நங்கர்ஹார் மாகாணத்துடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் அந்த வாகனம் திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி, வாகனத்தில் இருந்த அகதிகள் பலர் காயமடைந்தனர். அவர்களில் 22 பேர் உயிரிழந்தனர்.. தவிர, 36 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தகவலை மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் அப்துல் மாலிக் நியாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

விபத்தில் சிக்கியவர்களில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்களும் அடங்குவர். காயமடைந்த நபர்கள் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஓட்டுநர் தூங்கியபடி வாகனம் ஓட்டியதில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என மாகாண பொது சுகாதார இயக்குநர் அமினுல்லா ஷெரீப் கூறியுள்ளார். இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 27 பேர் உயிரிழப்பு!

இந்தியா

கார்டூமின், மே 31- வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவு களில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவத் தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

மோதல்

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், சூடானின் தெற்கு கர்டொபன் மாகாணம் பரா நகர் அருகே உள்ள அல் முஹ்ரா கிராமத்தில் துணை ராணுவப்படையினர் நேற்று (30.5.2026) திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 27 பேர் உயிரிழந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *