சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்

ரியாத், மே 30- சவுதி அரேபியாவுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ரஹீம் ஓட்டுநர் வேலைக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் பணியாற்றிய ரஹீம், மாற்றுத்திறனாளி சிறுவனை பராமரித்து வந்துள்ளார்.

அப்போது, செயற்கை சுவாசக் கருவியை கவனக்குறைவாக தட்டி விட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தற்செயலான மரணத்திற்கு காரணமாக இருந்த தாகக் கருதப்பட்டதால், ரஹீம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டு குற்றவாளியை மன்னித்தால், மரண தண்டனை போன்ற கடுமை யான தண்டனைகளில் இருந்து விடுபடலாம் என்ற சட்டம் சவுதி அரேபியாவில் உள்ளது. அந்தச் சட்டத்தின்படி, ரூ.34 கோடி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டு பொது மன்னிப்பு வழங்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ரூ.34 கோடியை செலுத்தினால் மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்று நீதி மன்றம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து கேரள மக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டினர். ரூ.34 கோடி கொடுக்கப்பட்டதை அடுத்து, ரஹீம் விடுவிக்கப்பட்டார். சவுதி அரேபியாவில் இருந்து விடுதலையான ரஹீம் நேற்று  (29.5.2026) கேரள மாநிலத்தின் கோழிக்கோடு வந்தடைந்தார். அவருக்கு கேரள மக்கள் நெகிழ்ச்சியுடன் உற்சாக வர வேற்பு அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *