இதுதான் பி.ஜே.பி. ஆட்சி! மத்தியப் பிரதேசத்தில் கோடிக்கணக்கில் பகல் கொள்ளை அதிரவைக்கும் கல்வி ஊழல் அம்பலம்!

2 Min Read

போபால், ஜூலை 13– மருத்துவக் கட்டமைப்பு இல்லாத மதுரை எய்ம்ஸ் விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்தில் அதைவிட ஒரு படி மேலே போய், ஒட்டுமொத்த கல்வித் துறையையே உலுக்கும் வகையிலான ஒரு மெகா மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பி.எட். கல்லூரி வெற்றிகரமாக இயங்கி வருவதாக அரசு ஆவணங்கள் கூறுகின்றன. இது சிவ்ராஜ் சிங் சவுகான் ஆட்சியில் திறந்துவைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், நிஜத்தில் அந்தக் கல்லூரி இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் ஒரு வெறும் மைதானமும்,  பாழடைந்த குப்பை கள் நிறைந்த ஒரு சிறிய தகர கூடம் மட்டுமே மொட்டையாகக் காட்சியளிக் கின்றன!

காகிதத்தில் பட்டதாரிகள்!

கல்லூரி வளாகம்  இல்லை, வகுப்பறைகள் இல்லை, பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக அங்கு ஒரு மாணவர் கூட நேரில் சென்ற தில்லை.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 400  மாணவர்கள் இந்தக் கல்லூரி யில் படித்து, தேர்ச்சி பெற்று, பட்டதாரிகளாக வெளியேறுவதாக அரசு கணக்குக் காட்டப்பட்டு வருகிறது. மேலும் நிர்வாக அதிகாரிகள் ஆசிரியர்கள் இதர ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாக ஊதியம் சென்று சேர்கிறது,

நிர்வாகச் செலவு மற்றும் இதர பரமாரிப்புச்செலவுகள் எல்லாம் இந்த வெற்று மைதானத்திற்காக அரசு ஒவ்வோரு மாதமும் ஒதுக்கி செலவிட்டு வருகிறது, இதற்கு என்று இரண்டு அரசு வாகனமும் இயங்குகிறது என்று அரசு ஆவனங்கள் கூறுகிறது

பகல் கொள்ளை

“இங்கு அப்படி ஒரு கல்லூரியே கிடையாது; வெற்று மைதானத்தை வைத்துக்கொண்டு யாரோ பகல் கொள்ளையடிக்கிறார்கள்” என்று அந்தப் பகுதி மக்களே தங்களது ஆதங்கத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர்.

ஒரு கல்லூரி இயங்குவதற்கான எந்தவொரு அடிப்படைத் தகுதியும் இல்லாத ஒரு இடத்திற்கு, கடந்த 10 ஆண்டுகளாக எப்படி அனுமதி நீட்டிக்கப்பட்டது?

பல்கலைக்கழக அதிகாரிகளும், கல்வித் துறையும் கண்களை மூடிக்கொண்டு இருந்தனவா என்ற கேள்வி எழுகிறது.

தொடர் ஆட்சியின் விளைவா?

மத்தியப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பில் நீடித்து வரும் நிலையில், கல்வித் துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.

ஒரே கட்சிக்குத் தொடர்ந்து மக்கள் அதிகாரத்தை அளிக்கும் போது, அங்கு அதிகார வர்க்கமும், சில தனியார் அமைப்புகளும் இணைந்து எத்தகைய துணிச்சலான ஊழல்களில் ஈடுபடுவார்கள் என்பதற்கு இந்த ‘மாயக் கல்லூரி’ ஒரு அப்பட்டமான சாட்சியாக மாறியுள்ளது.

வியாபாம் ஊழல் கண்ட மத்தியப் பிரதேசத்தில், இப்போது கல்வி நிறுவனங்களே காகிதத்தில் மட்டுமே இயங்கும் அவலம் அரங்கேறியுள்ளது. இது வெறும் முறைகேடு மட்டுமல்ல, தகுதியான மாணவர்களின் எதிர்காலத்தோடும், நாட்டின் கல்வித் தரத்தோடும் விளையாடும் பேராபத்தாகும்.

இனிமேலும் மக்கள் விழிப்புடன் இல்லாவிட்டால், ஆவணங்களில் மட்டுமே அனைத்தும் சுபிட்சமாக இருக்கும், நிஜத்தில் வெறும் மைதானமே மிஞ்சும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

இந்த மெகா மோசடிக்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அரசியல் பின்னணி கொண்ட வர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *