மசூதிகள் முன் பன்றியுடன் ஊர்வலம்! சமூக அமைதிக்குச் சவாலாகும் மதவெறிச் செயல்கள்!

1 Min Read

அண்மைக்காலமாக நாட்டின் சில பகுதிகளில் மத ரீதியான ஊர்வலங் களின் போது பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான செயல்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது இணையதளங்களில் காணொலி வேகமாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நபர் பன்றிக்குட்டியைத் கையில் ஏந்தியபடி உற்சாகமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் கைகளில் கத்திகள் மற்றும் வாள்களை ஏந்தி ஆக்ரோஷமாக முழக்கமிடுவதைக் காண முடிகிறது. இசுலாமிய மார்க்கத்தில் பன்றி ஹராமாகக் (‘புனித’மற்றதாக) கருதப்படும் நிலையில், திட்டமிட்டே மசூதிகளின் முன்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மத மோதல்களைத் தூண்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

‘புனித’மானதாகக் கருதப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு முன்பாக, மற்றொரு மதத்தினர் வெறுக்கும் விலங்கைக் கொண்டு வருவது வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயுதக் கலாச்சாரம்: ஊர்வலங்களில் பகிரங்கமாக கத்திகள் மற்றும் ஆயுதங்களைக் கையாளுவது சட்ட ஒழுங்கிற்கு விடப்படும் சவாலாகக் கருதப்படுகிறது.

மேற்குவங்கம் மற்றும் அசாமில் பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு சில அமைப்பினர் தங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கிடைத்துவிட்டது போன்ற தோரணையில் இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “யார் ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது” என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காவல்துறை உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *