கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க விரைவான சட்ட நடவடிக்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

1 Min Read

சென்னை, மே 27 தமிழ்நாட்டின் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாத்திட, உச்சநீதி மன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

69% இடஒதுக்கீடு வழக்கு

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் (தமிழ்நாடு சட்டம் 45/1994) வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் இன்று (27.5.2026) விசாரணைக்கு வரவுள்ளன.

இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நீதியின் அடிப்படையான 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எவ்வித தொய்வும் இன்றி பாதுகாப்பதற்கான சட்டப் பணிகள் மற்றும் நீதிமன்ற உத்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முதலமைச்சரின் அறிவுறுத்தல்

“தமிழ்நாடு அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது பலரின் உரிமைகளை உள்ளடக்கிய மிக முக்கியமான சமூக நீதிப் பாதுகாப்பு அரணாகும். எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வலுவான வாதங்களை முன்வைத்து, இந்த இடஒதுக்கீட்டை முழுமையாகப் பாதுகாத்திட தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசு வழக்குரைஞர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.”

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்:

உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த  நடவடிக்கை சமூக நீதி ஆர்வலர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *