இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது!

4 Min Read

புதுடில்லி, மே 26- இந்தியர்கள் வெளிநாட்டுப் பய ணங்களுக்காகச் செய்யும் செலவு, கடந்த பிப்ரவரி மாதத்து டன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் கணி சமாகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘தாராள மயமாக்கப்பட்ட பணப்பரிமாற்றத் திட்ட’ தரவுகள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இந்த தரவு களில் மேலும் கூறுகையில், “விடு முறைக்காலச் சுற்றுலாக்கள் உட்பட, இந்தியர்களால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மார்ச் மாதத்தில் ரூ.2,032 கோடி (212.43 மில்லி யன் டாலர்) குறைந்து, ரூ.9,000 கோடி யாக (1.09 பில்லியன் டாலர்) வீழ்ச்சிய டைந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் மட்டுமின்றி இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியர்கள் வெளிநாட்டுப் பய ணங்களுக்குச் செலவிடும் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜன வரியில் ரூ.15,790 கோடியாக (1.65 பில்லியன் டாலர்) இருந்த இந்தி யர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு, பிப்ரவரி மாதத்தில் ரூ.12,441 கோடியாக சரிந்தது. மார்ச் மாதத்தில் ரூ.10,000 கோடிக்கும் கீழாக குறைந்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.

 

மயிலாடுதுறையில்

அரசு அலுவலகங்களுக்குச் சென்று
த.வெ.க. மாவட்டச் செயலாளர் அதிரடி ஆய்வு!

அதிகாரிகளுக்கு ஆணையிடுவதால் பரபரப்பு!

மயிலாடுதுறை, மே 26- தமிழ் நாட்டில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க.  ஆட்சி அமைத்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட த.வெ.க. செயலாளர் கோபிநாத்தின் செயல்பாடுகள் தற்பொழுது மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களைத் தோற்கடித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன. இதனால், tதமிழ்நாட்டில் தவெக ஆளும்கட்சியாக இருந்தாலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்கட்சிக்கு என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) யாரும் இல்லை.

ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும்’ என்று அண்மையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட த.வெ.க. செயலாளர் குட்டிகோபி (எ) கோபிநாத் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அம்மா உணவக ஆய்வைத் தாண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்களுக்கும் த.வெ.க. மாவட்ட செயலாளர் கோபிநாத் தொடர்ச்சியாகச் சென்று வருகிறார். அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஒளிப்படங்களை வழங்கி, பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார்.

அதிகாரிகளுக்கு ஆணை

“நான்தான் ஆளும்கட்சியின் மாவட்ட செயலாளர். எனவே, எனக்குத் தெரியப்படுத்தாமல் அரசு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட எந்தவொரு முக்கியப் பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளக் கூடாது” என்று அதிகாரிகளுக்கு மறைமுகமாக உணர்த்துவதற்காகவே கோபிநாத் இந்த அரசு அலுவலகங்களுக்குச் சென்று வருவதாக அரசியல் மற்றும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் பரவலாகப் பேசப்படுகிறது.

மாவட்டத்தில் த.வெ.க.விற்கு மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாத சூழலில், மாவட்ட செயலாளரின் இந்த அதிரடி நகர்வுகள் மற்றும் மறைமுக உத்தரவுகள் மயிலாடுதுறை அரசு அதிகாரிகள் மற்றும் பிற அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இளைய தலைமுறையினருக்கு
பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும்!

ஆர்.எஸ்.பாரதி

சென்னை, மே 26- கோவை நிகழ்வை திசை திருப்பும் வகையில் த.வெ.க.வினர் பொய் பரப்புரை மேற்கொள்கிறார்கள் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. குறித்து சமூக வலைதளங்களில் த.வெ.க.வினர் அவதூறு பரப்புகிறார்கள். போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் பொய் பரப்புரை மேற்கொண்டால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும என்றும், இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி வலிவுறுத்தியுள்ளார்.

 

கொடைக்கானலில் நெரிசலை தவிர்க்க

வன சுற்றுலாத் தலங்களுக்கு மே 31 வரை இலவச அனுமதி

கொடைக்கானல், மே 26–- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலர் கண்காட்சி, கோடை விழா துவங்கி வரும் மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை காண தினசரி சுற்றுலாப்பயணிகள் நகரில் குவிந்து வருகின்றனர். நகரில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் வனத்துறையால் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பசுமை பள்ளத்தாக்கு அருகே வசூல் மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கியூஆர் கோடு முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சீசன் காலங்களில் நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வாகனங்கள் தாமதமின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணனிடம் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று நேற்று (25.5.2026) முதல் வரும் மே 31 வரை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை இலவசமாக பார்வையிடலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *