
கொல்கத்தா, மே 26- மேற்கு வங்கத்தில் பாஜக பல்வேறு சூழ்ச்சி களைச்செய்து வெற்றி பெற்றது, தேர்தல் பரப்புரையில் போது இறைச்சி விற்பதை நாங்க தடை செய்யமாட்டோம், என்று கூறிய பாஜக பல்வேறு விளம்பரங்களைச் செய்தது, மீனைத் தோளில் மாட்டிக் கொண்டு பரப்புரைச் செய்தனர், அசாம் முதலமைச்சர் மாட்டிறைச்சி சாப்பிடும் போட்டிக்கு ம்ம்தாவை அழைத்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நடந்தது பக்ரீத் பண்டிகைக்கு விற்பனைக்கு கொண்டுவந்த பசுக்களை முஸ்லீம்கள் வாங்க கூடாது என்று ஹிந்து அமைப்பினர் மிரட்டல் விட்டனர். விளைவு யாரும் மாடுகளை வாங்க வர வில்லை. பல்வேறு ஊர்களில் இருந்து பல ஆயிரம் செலவு செய்து மாடுகளைக் கொண்டு வந்துள்ளனர்.
அப்படிக் கொண்டு வந்த மாடுகளை யாரும் வாங்க முன் வராத்தால் சந்தையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் சந்தையில் பராமரிப்பு உணவு இல்லாமல் மாடுகளை இறந்து கொண்டு உள்ளது. மேற்கு வங்க கோ சாலை அமைப்போ நாங்கள் பசுமாடுகளை மட்டுமே பராமரிப்போம். இவை கன்றுக்குட்டி மற்றும் காளை மாடுகள். இவற்றை நாங்கள் பரா மரிக்க முடியாது. அதற்கான நிதியும் எங்களிடம் இல்லை என்று கூறி கைவிரித்துவிடவே சந்தை எங்கும் நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்தும் சில உயிர் விடும் கடைசி நேரத்தை எதிர்ப்பார்த்துகொண்டு இருக்கிறது
மேலும், மேற்கு வங்கத்தில் மனித நேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த சமூகத் தையும் உலுக்கியுள்ளது. பக்ரீத் பண்டிகைக்காக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஆடுகள் ஏற்றி வந்த லாரியைக் கவிழ்ந்த பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் வந்த ஒரு கும்பல் அள்ளிச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, வியாபாரிகள் தங்க ளின் வாழ்வாதாரத்திற்காகப் பெருமளவிலான ஆடுகளை ஒரு டிரக் மூலம் சந்தைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அதில் மாடுகளை ஏற்றிச்செல்கிறார்கள் என்று நினைத்து கம்பி பதித்த மரக் கட்டையைப் போட்டு மறித்த்தால் டிரக் சாலையில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
இந்த விபத்தில் பல ஆடுகள் படுகாயமடைந்தும், டிரக்கின் இடிபாடுகளுக்குள் சிக்கியும் பரிதாபமாக உயிரிழந்தன. விபத்தைக் கண்டு மக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு வந்த ஒரு கும்பல் அதிர்ச்சி தரும் வகையில் நடந்துகொண்டது.
பசுப் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் தங்களை அடையா ளப்படுத்திக் கொண்ட ஒரு சமூக விரோதக் கும்பல், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆடு களையோ அல்லது விபத்தில் சிக்கியவர்களையோ காப்பாற்ற முற்படாமல், இடிபாடுகளில் சிக்கி இறந்த மற்றும் காயமடைந்த ஆடுகளைத் தங்களின் வாகனங்களில் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச்செல்லத் தொடங்கினர்.
“பண்டிகைக்கால விற்பனைக்காக எங்கள் வாழ்வாதாரத்தையே முதலீடு செய்து இந்த ஆடுகளைக் கொண்டு வந்தோம். விபத்து நடந்த நேரத்தில் எங்களுக்கு உதவ யாருமே வரவில்லை. மாறாக, பசுப் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள் எங்களுடைய ஆடுகளைக் கொள் ளையடித்துச் சென்று விட்டனர்,” எனப் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரமான சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பசுப் பாது காப்பு என்ற போர்வையில் நடமாடும் இத்தகைய சமூக விரோதக் கும்பல்களின் அராஜகம் எல்லையைக் கடந்துவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், விபத்தைப் பயன்படுத்தி ஏழை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய அந்தக் கும்பல் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
