கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.5.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி; டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 96.66 ஆக குறைந்தது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அமெரிக்காவின் அணு ஆயுத, பாதுகாப்பு கொள்கைகள் மீது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் கடும் கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மேற்கு வங்கம் பாஜக ஆட்சியில் ஓபிசி இட ஒதுக்கீடு 7 சதவீதமாக குறைப்பு: புதிய பாஜக அரசு ஓபிசி துணைப் பிரிவுகளை ரத்து செய்ததன் மூலம், ஓபிசி இட ஒதுக்கீட்டை 17 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைத்து, மாநிலத்தை 2010-க்கு முந்தைய இட ஒதுக்கீட்டு முறைக்கே மீண்டும் கொண்டு சென்றுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாட்டில் மாநகராட்சி பள்ளிகள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை 89 சதவீதமாக உயர்த்தின. இது கடந்த ஆண்டின் 82.84 சதவீதத்திலிருந்து 3.41 சதவீதம் மேம்பட்ட நிலையாகும்.

தி இந்து:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தவறு ஏதுமில்லை: உச்ச நீதிமன்றம். ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஜாதிவாரியாக இருக்க வேண்டுமா, இல்லையா என்பது போன்ற அனைத்தும் கொள்கை முடிவுகள். இதில் என்ன தவறு இருக்கிறது? பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எத்தனை பேர் உள்ளனர், அவர்களுக்கு எத்தகைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசு அறிந்திருக்க வேண்டும்.. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது’ என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

* உத்தரப் பிரதேச அரசு இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, அகிலேஷ் ‘தணிக்கை அறிக்கையை’ வெளியிட்டார். மாநிலத்தில் ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் ஊழல்களும் முறைகேடுகளும் தலைவிரித்து ஆடுவதாகக் குற்றச்சாட்டு.

* ‘இணையவழி தவறான தகவல்களின் காலத்தில் பகுத்தறிவுச் சிந்தனை அவசியம்’: சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரவும் காலத்தில் பகுத்தறிவு சிந்தனை இன்றியமையாதது என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

தி டெலிகிராப்:

* மோடி தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம், முகநூல் கணக்குகள் முடக்கம்: நார்வே பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் கேள்விகள் கேட்ட சில நாட்களுக்குப் பிறகு, தனது இன்ஸ்டாகிராம் மற்றும்  முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் இணையத்தில் பயனர்களுக்குப் பதிலளிக்க முடியவில்லை என்றும் நார்வே பத்திரிகையாளர் ஹெல் லிங் குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *