இதுதான் ஆந்திர அரசின் கொள்கையா குழந்தை பெறும் எந்திரமா பெண்கள்?

அமராவதி நகர், மே 17- ஆந்திராவில் 3ஆவது குழந்தையை பெற்றுக் கொள்வோருக்கு 30 ஆயிரம் ரூபாயும், 4ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் 40 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் குறைந்து வரும் பிறப்பு மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை போன்ற சவால்களை சந்திக்க முதலமைச்சர் சந்திரபாபு மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை அறிவித்து இருந்தார். இந்த கொள்கையின் கீழ், அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் இணையர்களுக்கு பல்வேறு நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 3ஆவது மற்றும் 4ஆவது குழந்தைகள் பெற்றெடுக்கும் இணையருக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்துள்ளார். சிறீகாகுளம் மாவட்டம், நரசன்னபேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது;

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நமது சமூகம் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். 3ஆவது குழந்தை பிறந்தால் உடனடியாக ரூ.30 ஆயிரம், 4ஆவது குழந்தை பிறந்தால் ரூ.40 ஆயிரம் வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சட்டசபையில் உரையாற்றிய சந்திரபாபு, 2ஆவது குழந்தை பெற்றெடுக்கும் இணையர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவது பற்றி பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *