மோடி அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை?

புதுடில்லி, மே 24- ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபி எஸ்இ) 2026-2027 கல்வி யாண்டு முதல் 9, 10ஆம் குப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி ஒன்றைக் கற்பதைக் கட்டாயமாக்கி, மும்மொழிக் கொள்கை அறிவிப்பை வெளியிட்டது.

இதனை எதிர்த்து டில்லி, குரு கிராம், நொய்டா, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெற்றோர், ஆசி ரியர்கள் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழுவினர் ஒன்றிய அரசு, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி ஆகிய வற்றுக்கு எதிராக அரசியல் சாசனப் பிரிவு 32-இன் கீழ் ரிட் மனுவைத் தாக் கல் செய்தனர்.

இந்த மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்கி 22.5.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக இதனைப் பட்டியலி டக் கோரி வாய்மொழி வேண்டுகோள் விடுத்தார். அதில்,”இது புதிய சிபி எஸ்இ கொள்கையை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள மாணவர் கள், ஆசிரியர்கள், பெற்றோர் கள் தொடர்ந்துள்ள மனுவாகும்.

இதன்படி, 9ஆம் வகுப்பில் மேலும் 2 மொழிகள் கட்டாய மாக்கப்பட்டுள்ளன. 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் எவ்வாறு திடீரென ஒரு புதிய மொழியைத் தேர்ந்தெடுத்து, எப்படி 10ஆம் வகுப்பில் அதற்கான தேர்வை எழுத முடியும்? இது பெரும் குழப்பத்தை உருவாக்கும். எனவே இந்த மனுவை நாளை (25.5.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என ரோத்கி வாதிட்டார்.

தொடர்ந்து இந்த பொதுநல மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடுத்த வாரம் விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புதல் அளித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *