கட்னி, மே17 பீகாரைச் சேர்ந்த குழந்தைகள் மகாராட்டிராவின் லாத்தூருக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் துர்கேஷ் மரியா அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் ஜிஆர்பி (GRP) மற்றும் ஆர்பிஎஃப் (RPF) இந்த நடவடிக்கையை எடுத்தன.
கடந்த மாதம் 11-ஆம் தேதி, பீகாரைச் சேர்ந்த 163 சிறுவர்கள் மத்தியப் பிரதேசத்தின் கட்னி ரயில் நிலையத்தில் பாட்னா-புனே விரைவு ரயிலில் இருந்து ரயில்வே காவலர்களால் ‘வலுக்கட்டாயமாக’ இறக்கிவிடப்பட்டனர்.
ஆள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் இந்த 163 குழந்தைகள் மற்றும் 8 ஆசிரியர்களை புலின் ரயிலில் இருந்து இறக்கி விட்டார்.
பீகாரைச் சேர்ந்த குழந்தைகள் மகாராஷ்டிராவின் லாத்தூருக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படு வதாகக் கூறி, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் துர்கேஷ் மரியா அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் ஜிஆர்பி (GRP) மற்றும் ஆர்பிஎஃப் (RPF) இந்த நடவடிக்கையை எடுத்தன.
இந்தக் குழந்தைகள் காவல்துறை விசாரணையை எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. பல நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, தற்போது இந்தக் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்தக் குழந்தைகள் இறக்கி விடப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணத்தை அறிய, பிபிசி நியூஸ் இந்தி குழுவினர் பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த விவகாரம் குறித்து தெரிந்து கொள்ள முயன்றனர்.
கட்னி ரயில் நிலையத்தில் இறக்கப் பட்ட 163 குழந்தைகளில் 144 பேர் பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அராரியாவில் 55 வயதான கிஸ்மதியை நான் சந்தித்தேன்.
இந்தச் சம்பவத்திற்கு முன்பு அவர் ஒருபோதும் அராரியாவை விட்டு வெளியே சென்றதில்லை.
ஆனால் தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பேரனுக்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னிக்கு 900 கிலோமீட்டர் பயணம் செய்ய அவர் ‘கட்டாயப்படுத்தப்பட்டார்’.
கிஸ்மதி கூறுகையில், “என் குழந்தைகள் கல்வி கற்கச் சென் றார்கள். அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஹாபிஸ்’ ஆவதற் காகப் படித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு மூன்றாவது ஆண்டு. ஆனால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ததை எனது கைப்பேசி மூலம் அறிந்தேன்.
பத்து நாட்களாக குழந்தைகளிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால், 6,000 ரூபாய் கடன் வாங்கி கட் னிக்குச் சென்றேன். அங்கே நான் காவல் துறையினரிடம் சென்று அழுதேன், ஆனால் அவர்கள் என்னைக் குழந்தைகளைப் பார்க்க விடவில்லை. குழந்தைகளைப் பார்க்கும் வரை இங்கிருந்து நகர மாட்டேன் என்று கூறினேன். அதன் பிறகே குழந்தைகளை என்னிடம் காட்டினர்” என்றார்.
