கோயிலா? குப்பைக் கிடங்கா? கேதார்நாத் கோயிலால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு!

2 Min Read

புதுடில்லி, பிப். 28– ஆண்டுதோறும் அதிக அளவில் கேதார்நாத் கோயில் பகுதியில் குப்பை சேர்வதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்றுச்சூழல் மோசமடைவதாக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கேதார்நாத் கோயில்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை உள்ளன. இவை சார்தாம் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்கள் இந்த சார்தாம் கோயில்களுக்கு ‘புனித’ச் சுற்றுலா சென்று வருவதை பெரிதாகக் கருதுகின்றனர்.

குறிப்பாக கேதார்நாத் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தக் கோயிலைச் சுற்றியும், மலைப் பகுதிகளிலும் அதிக அளவில் குப்பை சேர்வதாக ஒரு ஆய் வில் தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டில் மட்டும் இங்கு 21.4 மெட்ரிக் டன் குப்பை சேர்ந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும். அதிக அளவில் இங்கு குப்பை சேர்வதால் இப்பகுதியின் சுற்றுச் சூழல் மோசமாகும் நிலை ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்திவிட்டு அப்படியே வீசி விடுவதால் அதிக அளவில் குப்பை சேர்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிப்பததாக அமைந்துள்ளது.

யுனெஸ்கோவில் அங்கீகரிக்கப் பட்ட இந்த தலத்தை குப்பை போன்ற மாசுகளில் இருந்து காக்க வேண்டும் என்ற கோரிக்கை சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடமிருந்து எழுந்துள்ளது.

இந்த ஆய்வை கேதார்நாத் நகர் பஞ்சாயத்து நடத்தியுள்ளது. இதுதொடர்பாக அமித் குப்தா என்று சுற்றுச் சூழலியலாளர் கூறும்போது, “குப்பை போன்ற திடக்கழிவு மேலாண் மைக்கான வசதிகள் இருந்தபோதிலும், சரிவர அவை அகற்றப்படுவதில்லை. இது திடக் கழிவு மேலாண்மை தோல்வியைத் தெளிவாகக் காட்டுகிறது.

2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் இடையே சேர்ந்த 21.4 மெட் ரிக் டன் குப்பையில் வெறும் 8.7 மெட்ரிக் டன் குப்பை மட் டுமே பதப்படுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள 12.7 மெட்ரிக் டன் குப்பை, கேதார்நாத் கோயிலுக்கு அருகே உள்ள அடிப்படை முகாமின் நிலப் பரப்புகளிலோ அல்லது திறந்தவெளி இடங்களிலோ குவிந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இது மிக அதிக அளவிலான திடக்கழிவாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு உண்டாகும்” என்றார்.

இந்நிலையில் ரூ.3.13 கோடி மதிப்பிலான திடக்கழிவை பதப்படுத்தி வெளியேற்றும் கருவிகளை வாங்குவதற்காக திட்டமும் இன்னும் நிலுவையில் உள்ளதாக கேதார்நாத் கோயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் இமாலய மலைப்பகுதியில் கேதார்நாத் தலம் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் மேம்பாடு, ஹெலிகாப்டர் சேவைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டாலும், திடக்கழிவு நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *