மணிப்பூரில் பயங்கரம் கிறிஸ்தவக் கோயில் தலைவர்கள் 3 பேர் ஆயுதமேந்திய கும்பலால் சுட்டுக்கொலை!

1 Min Read

இம்பால், மே 15- மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் வேளையில், மூன்று கிறிஸ்தவக் கோயில் தலை வர்கள் ஆயுதமேந்திய கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் காங் போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த ‘தாடோ பாப்டிஸ்ட் அசோசியேஷன்’ (Thadou Baptist Association) அமைப்பின் முக்கியத் தலைவர்களான: ரெவரென்ட் வி. சிட்லோர் ரெவரென்ட் கைகுலன் பாஸ்டர் பாவோகுலன் ஆகிய மூவரும் சுராசந்த் பூரில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் பங் கேற்றுவிட்டு, தங்களது இருப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் காட்சிம் மற்றும் கோட்லென் ஆகிய கிராமங் களுக்கு இடையே வந்து கொண்டிருந்த போது, அங்கு மறைந்திருந்த ஆயுத மேந்திய மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியது.

கும்பலின் கண்மூடித் தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்த ரெவரென்ட்கள் மற்றும் பாஸ்டர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே குருதி வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மணிப்பூரில் யும்னம் கெம் சந்த் சிங் தலை மையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்ெகனவே இன மோதல்களால் மாநிலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கிறிஸ்தவக் கோயில் தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சி யையும், அச்சத்தையும் ஏற் படுத்தியுள்ளது.

இந்தக் கொலைகளுக்குப் பின் னால் உள்ள கும்பலைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த தலைவர் களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பல் வேறு தரப்பினர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் எல் லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *