புதுடில்லி, ஏப். 30- 2025இல் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனிக்கு அடுத்த படியாக 5 ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
மொத்த உலக ராணுவச் செல வினத்தில் சுமார் 1.68 ட்ரில்லியன் டாலர் (58 சத வீதத்தை) இந்த 5 நாடுகள் கொண்டுள்ளன.
இதில் இந் தியா மட்டும் 92.1 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த ராணுவச் செலவு 2,887 பில்லியன் டால ராக உயர்ந்துள்ளது.
உலகளாவிய ராணுவச் செலவில் இந்தியாவின் பங்கு 3.2 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ராணுவச் செலவு 8.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆயுத இறக்குமதியில் இரண்டா மிடம் 2026-2027 ஒன்றிய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ.2.19 லட்சம் கோடி புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்கள் வாங்கப் பயன்படுத்தப்பட உள்ளன.
சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பதற்றங் கள் இந்தியாவின் பாது காப்புச் செலவை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
உலகளாவிய ஆயுத இறக்குமதி யில் 8.2 சதவிகித பங்களிப்புடன் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது.
அதேபோலதனது ராணுவத் தேவைகளுக்காக நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாவை சார்ந்திருப்பதை தொடர்ந்து குறைத்து வருகிறது.
2011-2015இல் 70 சதவிகிதமாக இருந்த ரஷ்யாவின் பங்கு, தற்போது 40 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
தற்போது பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடுகளாக உள்ளன.

