தெலங்கானா அரசு மருத்துவமனையில் குளிரூட்டி வெடித்து தீ விபத்து! 2 குழந்தைகள் பலி; தீவிர விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அய்தராபாத், செப்.24- தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலச் சிறப்புப் பிரிவில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் குழந்தைகள் நலச் சிறப்புப் பிரிவில் 21.9.2026 அன்று நள்ளிரவு இத் தீ விபத்து நேரிட்டது.

இந்நிகழ்வு குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குழந்தைகள் பிரிவில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் தீ வேகமாகப் பரவியது. விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பிரிவில் மொத்தம் 27 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். குளிரூட்டி வெடித்ததில் புகையும் தீயும் சூழ்ந்ததில், ஒரு குழந்தை நிகழ்வு இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தது.

உடனடியாக மீட்கப்பட்ட மற்ற குழந்தைகள் அருகில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மற்றொரு குழந்தையும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

படுகாயமடைந்த மேலும் இரண்டு குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற குழந்தைகளின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். முதல்கட்ட ஆய்வில், தொழில்நுட்பக் கோளாறு  காரணமாகவே ஏசி வெடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் துயரச் நிகழ்வுக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்துள்ளார். பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் அனைவருக்கும் உயர்தரச் சிகிச்சை அளிக்கப்படுவதை உடனடியாக உறுதிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த விபத்து குறித்து விரைவாகச் சமர்ப்பிக்க முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *