புதுடில்லி, ஜூன் 17 நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவருக்கு, நீதிமன்ற உத்தரவின்படி பலத்த பாதுகாப்புடன் வந்து மறுதேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரூ.10 கோடி வினாத்தாள் மோசடி – சிறையிலிருந்து வந்த மாணவர்
நடப்பு ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளைப் பெற்று, அதனை சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்ததாக அரியானாவைச் சேர்ந்த மாணவர் யஷ் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தனக்கு நீட் மறுதேர்வு எழுத அனுமதி கோரி அவர் டில்லி நீதிமன்றத்தை நாடினார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அவருக்குத் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு யஷ் (யாதவ்), நீட் மறுதேர்வை எழுத உள்ளார்.
மோசடிக்குத் துனைபோன ஒருவருக்குத் தேர்வு எழுத நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது பொதுமக்கள் மற்றும் சக தேர்வர்கள் மத்தியில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது.
