மேற்கு வங்கத் தேர்தலில் 93% வாக்குப்பதிவு வன்முறை, முறைகேடு புகார்களுக்கிடையே முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தல்!

1 Min Read

கொல்கத்தா, ஏப்.30 மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில் நேற்று (29.4.2026) நிறைவடைந்தது. இந்த இறுதிக்கட்டத் தேர்தலில் 92.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மேற்கு வங்கத்தில் 92.9 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மிக முக்கிய தொகுதி யான பவானிபூரில் முதலமைச்ச் மம்தாவும், பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரியும் நேரடியாகப் போட்டியிடுகின்றனர். நேற்று மம்தா வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே தனது வாக்கை செலுத்தினார். வாக்குப்பதிவின் போது ஒரு கட்டத்தில் சக்ரபேரியா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மம்தாவும், சுவேந்து அதிகாரியும் ஒரே நேரத்தில் சந்திக்க நேர்ந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் தவிர்த்த நிலையில், இரு தரப்பு ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

மத்திய படைகள்மீது
மம்தா குற்றச்சாட்டு

வாக்களித்த பின் செய்தியாளர் களிடம் பேசிய முதல்வர் மம்தா, “மத்திய பாதுகாப்புப் படைகள் சுதந்திரமாகச் செயல்படவில்லை. அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களையும் சாமானிய மக்களையும் அச்சுறுத்துகின்றனர். இது ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்” எனத் தெரிவித்தார். மேலும், பல வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்ற அவர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆங்காங்கே வெடித்த வன்முறை

ஹவுரா: வாக்கு இயந்திரக் கோளா றால் தாமதமான வாக்குப் பதிவை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது மத்திய படைகள் தடியடி நடத்தின.

மே 4-இல் தேர்தல் முடிவுகள்

மேற்கு வங்கத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *