தோ்தல் விதிகளைமீறி செயல்பட்ட நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க வேண்டும் மம்தா வலியுறுத்தல்

2 Min Read

கொல்கத்தா, ஏப்.18 தோ்தல் நடத்தை விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் பெண் களுக்கு ரூ.3,000 தருவதாக அட்டைகளை விநியோகித்த ஒன்றிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

பெண்களுக்கு ரூ.3 ஆயிரம்

மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிா்மலா சீதாராமன், தோ்தலில் வென்றால் பெண்கள் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.3,000 செலுத்தப்படும் என்ற பாஜகவின் முக்கிய வாக்குறுதி தொடா்பான அட்டைகளை பெண்களுக்கு விநியோகித்தாா். அதில், பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.3,000 செலுத்தப்படும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் அலிபூா்துவாரில் தோ்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இது தொடா்பாக பேசியதாவது:

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் இப்போது மேற்கு வங்கத்துக்கு வந்து விடுதிகளிலும், விருந்தினா் இல்லங் களிலும் தங்கியுள்ளனா். இவா்களின் பணி வாக்காளா்களைச் சந்தித்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் விநியோகிப்பதாகும்.

மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு செய்து வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் பலரின் பெயா்களை நீக்க சதி நடந்து வருகிறது. இதைத் தொடா்ந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்துவாா்கள்.

பதவி விலக வேண்டும்

மகளிா் இடஒதுக்கீடு மசோதா எப்போதோ நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை அமல்படுத்தாமல் இருந்தது ஒன்றியஅரசுதான். இப்போது வேறு நோக்கத்துக்காக மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் ஒன்றிய அரசு சதி செய்கிறது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் ரூ.3,000 தருவதாகக் கூறி அட்டைகளை ஒன்றிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கியுள்ளாா். இது வாக்காளா்களை தவறாக வழிநடத்தும் செயல். தோ்தல் ஆணையம் இதில் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது?. பாஜகவுக்கு எதிராக எங்கள் கட்சியினா் அளிக்கும் அனைத்துப் புகாா்களையும் புறக்கணிப்பதைப்போல இந்த விஷயத் திலும் நடந்து கொள்ளப் போகிறதா?

தோ்தல் விதிகளை மீறிச் செயல்பட்ட நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பிரதமா் நரேந்திர மோடி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றாா்.

இவ்வாறு மம்தா கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *