இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

2 Min Read

ராஞ்சி, ஆக. 10- போராட் டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர் களுக்குத் தேவை நீதியே தவிர, அரசியல் ஆதரவு அல்ல என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று (9.8.2026) தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மஹாஉத் சவம் 2026 நிகழ்ச்சியில் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உரிமைகளுக்காக நமது இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நமது அரசாங்கத்தின் நடவடிக் கைகளால் அவர்கள் தைரியத் துடன் தங்கள் கோரிக்கை களை முன்வைத்து போராடி வருகின்றனர். இளைஞர்கள் விரைவில் நீதி பெறுவார்கள். முறைகேடுகளுக்கு காரணமான வர்கள் விரைவில் கடுமையான தண்டனைக்குள்ளாக் கப்படு வார்கள்.

மாணவர்களின் இந்த போராட்டத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம். சில அரசியல் கட்சிகள் இளைஞர்களின் போராட்டத்தை தவறாக வழிநடத்தத் தூண்டுகின்றனர். குறிப்பாக இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இளைஞர்களுக்குத் தேவையானது நீதியே தவிர, அரசியல் கட்சிகளின் ஆதரவு அல்ல. உண்மையான தகவல்களுடன் சில பொய்யான தகவல்களையும் இளைஞர்களிடையே பரப்பி சில கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. இது இளைஞர்களின் உண்மையான போராட்டத்தை திசைதிருப்புகிறது.

அரசாங்கத்தின் வலிமையான வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பின்புலத்தில் இருந்து தவறாக வழிநடத்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் சார்பில் 103 காலி பணியிடங்களுக்காக நடத்தப் பட்ட தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூலை 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் புகார் எழுப்பினர்.

இது குறித்து சிஅய்டி விசா ரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவிலும் முறைகேடுகள் குறித்து எந்தவொரு தகவலும் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா திடலில் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து உரிய முறையில் சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *