மாநில அளவிலான கிக்பாக்சிங் போட்டி திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை!

1 Min Read

திருச்சி, மார்ச் 12- திருச்சி விமான நிலையம் அருகேநிலையப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற 12ஆவது மாநில அளவிலான ‘கிக்பாக்சிங்’ (உதை-குத்துச் சண்டை) சாம்பியன்ஷிப் போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றுப் பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழ்நாடு கிக்பாக்சிங் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட அமெச்சூர் கிக்பாக்சிங் அமைப்பு இணைந்து நடத்திய இந்தப் போட்டியில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இப்பள்ளி மாணவிகள் தங்களது அபாரத் திறமையை வெளிப்படுத்தினர்:

மாணவி சி.ஷிஃபா 28 கிலோ எடைப்பிரிவில் மிகச் சிறப்பாகப் போட்டி யிட்டு தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று இரட்டைச் சாதனை படைத்தார்.

மாணவி பி.திவ்ய சிறீ இதே பிரிவில் திறம்பட விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சாதனை மாணவி களுக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டுத் துறையில் மாணவிகள் தொடர்ந்து சிறந்து விளங்கத் தேவையான அனைத்து ஊக்கமும் அளிக்கப்படும் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *