பெரியார் மருந்தியல் கல்லூரித் துணை முதல்வருக்கு இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருது

திருச்சி, ஜூன் 23- இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2026 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை, போரூர் சிறீஇராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்  20.06.2026 அன்று நடைபெற்றது.

இதில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக சிறப்பாக செயல்பட்டு வருவதனை பாராட்டி  இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு 2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருதினை வழங்கி சிறப் பித்துள்ளது.

இவ்விருதினை தமிழ்நாடு மாநில மருந்தியல் கழகத்தின் தலைவர் ஜெ. ஜெயசீலன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் செயலாளர் முனைவர் எஸ். வின்சென்ட் ஆகியோர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி  இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ் நாடு பிரிவுத் தலைவர் முனைவர் வீ.சங்கர், துணைத் தலைவர் முனைவர் சி. கந்தசாமி மற்றும் செயலாளர் முனைவர் ஆர். சம்பத் குமார் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக  நடைபெற்றது.

இந்நிகழ்வில் மருந்தியல் துறை யில் சாதனை படைத்த பல்வேறு பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *