புதிதாக போடப்படும் சாலைகளில் பள்ளம் தோண்ட ஓராண்டு தடை சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை, மே 7- சென்னையில் புதிதாக போடப்படும் சாலைகளில் ஓராண்டுக்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக போடப்படும் சாலைகள் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.மின்சார இணைப்பு, தொலைபேசி இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு,…
நியாயவிலைக் கடைகளில் ‘கியூ ஆர் கோடு’ மூலம் மின்னணு பணப்பரிமாற்றம்
காஞ்சிபுரம்,மே7 - தமிழ்நாட்டில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் நடை முறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்…
ஆளுநர் வரம்பு மீறி அரசியல் பேசலாமா? – சி.பி.எம். செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
தஞ்சாவூர், மே 7 - “தமிழ் நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர் களுடன் விரைவில் ஆலோ சனை செய்யப் படவுள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித் தார்.தஞ்சாவூரில் தியாகிகள்…
பூதக்கண்ணாடி போட்டு தேடித் தேடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த ஆளுநர் முயற்சி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
சென்னை,மே7- சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞரின் வரும் முன் காப் போம் திட்ட மருத்துவ பரிசோ தனை முகாமை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆளுநர் சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமண…
பெரியார் விடுக்கும் வினா! (969)
பார்ப்பானுக்கும் - பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழிந்து விட்டதா? சமதர்மம் என்றால் உண்மையாகவே பார்ப்பான் ஒழிப்பும் - பணக் காரன் ஒழிப்பும் தானே! பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காண முடியுமா?- தந்தை…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு
ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன் னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட் டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து..
7.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉 ஜாதி, மத ரீதியாக பிரித்து பார்த்தால் ‘திராவிட மாடல்' தெரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்ப வர்களை பற்றி கவலையில்லை என ‘திராவிட மாடல்' குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மாநிலக் கல்லூரியில் – நூல் வெளியீட்டு விழா
"தமிழையும், தமிழர்களையும் காக்க உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம்"உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேச்சுசென்னை, மே 7 - சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன் தலைமையில் கல்லூரித்…
செய்திச் சுருக்கம்
மீட்புஇலங்கையில் இருந்து படகு மூலம் தப்பி வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் கைக் குழந்தை உள்பட 10 அகதிகள் தவித்தனர். அவர்களை மீனவர்கள் உதவியுடன் கடலோர காவல் துறையினர் மீட்டனர்.பொறியியல் கல்வி2023-2024ஆம் கல்வியாண்டுக்கான பி.இ.,பி.டெக்., பி.ஆர்க்., போன்ற பொறியியல்…
எது காலாவதி?
‘திராவிட மாடல்' காலாவதியான ஒன்று என்று ஆளுநர் கூறியது பற்றி கனிமொழி எம்.பி. அவர்கள் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "ஆளுநர் பதவியே காலாவதியான ஒன்றே! அத்தகையவர்கள் பேசுவதை எல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை" என்றார்.
