நன்கொடை
முடப்பள்ளி ப.கனகவேல்-கலையரசி ஆகியோரின் மகள் க. பாவனா பத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண் பெற்றதின் மகிழ்வாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் ரூ. 500அய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார். உடன்: விருத்தாசலம் மாவட்ட தலைவர் அ. இளங்கோவன், செயலாளர் ப.வெற்றிச் செல்வன்,…
‘விடுதலை’ ஆண்டு சந்தா
வீரசோழபுரம் கிருஷ்ண மகாலில் 28.05.2023 அன்று நடைபெற்ற அ.க.அருள்மணி - க.தென்குமரி ஆகியோர் இணையேற்பு விழா மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000த்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜிடம் வழங்கினர்.
முடப்பள்ளி கழகத் தோழர் கலைமணியின் புதிய இல்லத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று வாழ்த்து
முடப்பள்ளி கழகத் தோழர் கலைமணியின் புதிய இல்லத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், சுதா அன்புராஜ், நாகம்மையார் குழந்தைகள் இல்லக் காப்பாளர் தங்காத்தாள் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
உடல் நலத்தில் அலட்சியம் வேண்டாம்!
உடல் நலத்தில் அலட்சியம் வேண்டாம்!நமது நண்பர்கள் பலரும் தங்களது உடல்நலம் காப்பதில் போதிய கவனத்தை ஏனோ செலுத்த மறந்து விடுகின்றனர்! அலட்சியம்தான் காரணம்!!இன்னும் சிலர், 'ஆங்... எனக்கொண்ணும் வராதுங்க - நான் இது வரைக்கும் ஆஸ்பத்திரிக்கே போனதில்லைங்க. மருந்து சாப்பிட்டதே இல்லீங்க;…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் ஜூன் 12ஆம் தேதி நடத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் முடிவு.👉சாவர்க்கார் பிறந்த நாளை மோடி உள்ளிட்ட அமைச் சர்கள் நாடாளுமன்ற மண்டபத்தில் கொண்டாடினர்.👉 நாடாளுமன்ற திறப்பு விழா அல்ல; மோடி தனக்குத்…
மாற்றங்கள் என்பவைதான் மாறாதவை!
கடந்த 13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். 1932இல் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு தந்தை பெரியார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் ஈரோட்டில் தனது இல்லத்தில் சுயமரியாதை இயக்கத் தோழர்களையும்…
பெரியார் விடுக்கும் வினா! (990)
ஒரு மனிதன் சமதர்மக் கொள்கைக்காரனாய் இருப்பானானால் அவன் தனது உள்ளத்தில் மற்றொரு மனிதனைத் தனக்குச் சமமாகவும், மற்றொரு மனிதனுக்குத் தான் சமமானவனென்றும் கருதும்படியான ஓர் உணர்ச்சியைக் கொள்ள வில்லையானால் - அல்லது கொள்ளும்படிச் செய்யவில்லையானால் சமதர்மத்தைப் பற்றிப் பேசும் பேச்சு எதற்கு?-…
கேள்விகளுக்குப் பதில் உண்டா?
யார் இந்து விரோதி?1) எல்லோரும் இந்துக்கள் என்றால் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வணங் கும் கடவுள்களான அய்யனாரையும் காத்தவராயனையும் கருப்பசாமியையும் மதுரை வீரனையும் பார்ப்பனர்கள் வணங்குவதில்லையே ஏன்? 2) பெரும்பான்மை மக்களது மேற்கண்ட கடவுள்களுக்கு பூசாரிகளாகப் பார்ப்பனர்கள் வந்து கிடாய்வெட்டிப்…
பொதுவுடைமை பாலபாடம்
"பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்" என்பது பொது உடைமைத் தத்துவத்துக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும் ('குடிஅரசு' - 25.3.1944)
64 தனியார் பள்ளிகளில் உள்ள 380 வாகனங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் ஆய்வு
பெரம்பலூர்,மே29 - பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர்களை ஏற்றி செல்லும் 380 வாகனங்கள் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட…
நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு படுகுழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் குற்றச்சாட்டு
சென்னை, மே 29 - 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் தோல்விகள் சந்தித்ததன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாரதீய ஜனதா அரசு படு குழியில் தள்ளிவிட்டது என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர் பாளர் ராஜீவ் கவுடா…
பகுத்தறிவுப் பகலவன் சிலை நிறுவ- நகராட்சி நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்
ராமநாதபுரம், மே 29 ராமநாதபுரத்தில் 27.5.2023 அன்று மாலை 6 மணிக்கு கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.முருகேசன், ராமநாதபுரம் நகர தலைவர் பழ.அசோகன் , பொதுக்குழு உறுப்பினர் கயல்…
