‘கரப்பான் பூச்சிகள்’ அமைத்த சாம்ராஜ்யம் டில்லியை பணிய வைத்த ஜென் இசட் இளைஞர்களின் வரலாற்று நிகழ்வு!

புதுடில்லி, ஜூலை26 நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் தேர்வு முறைகேடுகளால் நாடு முழுவதும் எழுந்த இளைஞர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேறறு (25.7.2026 தனது பதவியிலிருந்து விலகினார். டில்லி ஜந்தர் மந்தரில் இளைஞர் பட்டாளம் நடத்திய மாபெரும் போராட்டத்திற்குப் பணிந்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

கரப்பான் பூச்சி உதயம்

நீதிமன்ற வாதத்தின் போது வேலை இல்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் “கரப்பான்பூச்சிகள்” என மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கூறி சர்ச்சை வெடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் வசித்து வந்த போஸ்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியான ‘அபிஜித் தீப்கே’, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ எனும் இளைஞர் அமைப்பை மே 16 அன்று தொடங்கினார்.

கேள்வி எழுப்பிய
இளைஞர்கள்

“கரப்பான் பூச்சிகள் ஒன்றாக சேர்ந்தால் என்ன ஆகும்?” என்ற ஒற்றைக் கேள்வியோடு சமூக வலைதளங்களில் ஒன்றுதிரண்ட ஜென் இசட் இளைஞர்கள், டில்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் தீவிர முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர்.

சோனம் வாங்சுக்

இப்போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரபல சமூக மற்றும் காலநிலை ஆர்வலர் ‘சோனம் வாங்சுக்’ ஜூன் 28 அன்று சிஜேபி (CJP) அமைப்பின் மேடையில் இணைந்து 26 நாட்கள் தொடர் உண்ணா நிலையில் இருந்தார். அவரது உடல்நிலை நலிவடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உண்ணா நிலையைத் தொடர்ந்தார். இதனால் மாணவர் போராட்டம் இந்திய அளவில் பூதாகரமாகி, உலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது.

பதவி விலகல் கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது, “நீட் விவகாரத்தில் ஆரம்ப நாளிலிருந்தே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஜந்தர் மந்தரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உருவெடுத்துள்ள சூழ்நிலையால் தேச விரோத சக்திகள் பயனடைந்து விடக் கூடாது.

நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவுமே நான் எனது பதவியையிலிருந்து விலகுகிறேன்’’ என்று போராடுவோரை தேச விரோத சக்திகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறைத் தேர்வாக மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அபிஜித் தீப்கே

பிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே “இது ஜனநாயகத்தின் வெற்றி! பயப்படாமல் எதிர்த்து நின்றால் அரசைப் பணிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று. ஆனால், எங்கள் போராட்டம் இத்துடன் முடியவில்லை. நீட் முறைகேட்டால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *