காசியில் மசூதி அருகில் வியாஸ் மண்டபத்தில் பூஜை சர்ச்சை முஸ்லிம்கள் கடை அடைப்புப் போராட்டம்
புதுடில்லி, பிப்.3 வாரணாசி யின் வியாஸ் மண்டபத்தில் பூஜைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து முஸ்லிம்கள் நேற்று (2.2.2024) கடையடைப்பு வேலை நிறுத்தம் நடத்தினர். இதுதொடர்பான வழக்கு உத்தர பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உத்தரப் பிரதேச…
“உங்களது எதிரிகள் யார்?- தெரிந்து கொள்ளுங்கள்!” (2)
நேற்று (2-2-2024) சுட்டிக்காட்டி எழுதியபடி - "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்" என்பதில் எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி மூன்றாவது வரிசையில் சோம்பலைச் சேர்த்துள்ளார்! சோம்பல் என்பது ரொம்ப ரொம்ப விரைவாக நம்மை அது பற்றிக் கொள்ளும் -…
கருநாடகத்தில் ஒலிக்கும் ஒரு குரல்!
“தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை ஒன்றிய அரசு தொடரு மானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்” என்று காங்கிரஸ் எம்.பியான டி.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து,…
மனித சமூகம் திருப்தியடைய
ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும்அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே எனது கொள்கை. (குடிஅரசு, 10.5.1936)
சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் சிறப்புரை
தமிழ்நாட்டில், முன்சீப் நியமனங்களிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது! முன்சீப்பை யார் தேர்வு செய்கிறார்களோ, அந்தத் தேர்வுக் குழுவில், 69 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை! எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் சமூகநீதியாகும்! சென்னை, பிப்.3 தமிழ்நாட்டில், 69 சதவிகித…
திராவிடர் கழக செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார் – தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!
இன்று (3-2-2024) கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில், கழக செயலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.
திராவிடர் கழக செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தேர்வு!
ஜனநாயகம்- மதச்சார்பின்மை - சமூகநீதி - சோசலிசம் - மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட ‘இந்தியா' கூட்டணி வெற்றிபெற வாக்களிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்! கழகக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்! திராவிடர் கழக தலைமைச்…
எங்கள் அண்ணா – என்றும் வாழ்கின்றார்! வாழ்வார்!!
அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று (3-2-2024) ‘‘எங்கள் அண்ணா, என்றும் வாழ்கின்றார், வாழ்வார்!'' என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: இன்று (3-2-2024) அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு…
அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3-2-2024) கடலூரில் உள்ள அவரது சிலைக்கு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை
அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3-2-2024) கடலூரில் உள்ள அவரது சிலைக்கு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ‘இந்தியா' கூட்டணி உடைகிறதா? உடைக்கப்படுகிறதா? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : இரண்டும் இல்லை; தூய்மை யாக்கப்படுகிறது! "கட்டுச் சோற்றில் பெருச்சாளிகள் வெளியேறியது" தூய்மை தானே! --- கேள்வி 2: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் தமிழ்நாட்டிற்குப்…
தாய்ப்பாலில் கிருமிகள் இருக்குமா?
மருத்துவர் ப.வைத்திலிங்கம் மனித உடல் முழுவதும் கிருமிகள் ராஜ்ஜியம்தான்! உயிரினங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. உயிரியல்படி அவைகளின் குறிக்கோள் இவ்வுலகில் உயிர் பிழைத்து வாழ வேண்டும்; தன் இனம் பெருக வேண்டும் என்பது மட்டுமே. ஒரு செல் உயிரினத்தில்…
கிராமப் பிரச்சாரம் பற்றி ‘குடிஅரசு’
ஜில்லா ஜட்ஜுகள் பிராமணர்கள்; சப் ஜட்ஜுகள் பிராமணர்கள்; ஜில்லா முனிசிப்புகள் பிராமணர்கள்; கலெக்டர்கள் பிராமணர்கள்; டிப்டி கலெக்டர்கள் பிராமணர்கள்; அட்வகேட் ஜெனரல் பிராமணர்; அரசாங்கக் காரியதரிசிகள் பிராமணர்கள்; கைத்தொழில் இலாக்கா டைரக்டர் பிராமணர். இன்னமும் 1000, 2000, 3000 ஊதியம் உள்ள…
