முஸ்லிம் இடஒதுக்கீடு: பா.ஜ.க. பதிவை நீக்க வேண்டும் எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
புதுடில்லி, மே 9- முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த சர்ச்சை கருத்து அடங்கிய கேலிசித்திர காட்சிப் பதிவை வெளியிட்ட கருநாடக பாஜகவின் பதிவை உடனடியாக நீக்குமாறு ‘எக்ஸ்’ வலைதளத்தை இந்திய தேர்தல் ஆணையம் 7.5.2024 அன்று அறிவுறுத்தியது. கருநாடத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில்…
விதிமுறைகளை மீறும் பிரதமர்! வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம் கபில்சிபல் குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 9- தேர்தல் விதிமுறைகளை மீறும் பா.ஜ.க., மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தின் செயல் கண்டிக்கத் தக்கது, வெட்கக்கேடானது என்று மூத்த வழக்குரைஞரும், மாநிலங் களவை உறுப்பினருமான கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார். தேர்தல்…
பிஜேபி வேட்பாளரை விரட்டியடித்த பஞ்சாப் விவசாயிகள்
சண்டிகர், மே 9- பஞ்சாபில் பா.ஜ.க., வேட்பாளரை நடுரோட்டில் நிற்க வைத்து விவசாயிகள் கேள்வி கேட்டதால் வாக்குச் சேகரிக்க முடியாமல் வந்த வழியே திரும்பி சென்றார். பஞ்சாபில் பா.ஜ.க., வேட்பாளரை நடுரோட்டில் நிற்க வைத்து விவசாயிகள் கேள்வி கேட்டு போராட்டம் நடத்தியதால்…
மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஜூலையில் செயல்பாட்டுக்கு வரும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தகவல்
சென்னை, மே 9 உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கும் ‘தமிழ் புதல்வன்’திட்டம், வரும் ஜூலை மாதம் முதல் அமல் படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.…
சென்னையில் உலக பத்திரிகை நாள் விழா: பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தும் ஆவணப்படம் வெளியீடு
சென்னை, மே 9- சென்னை தரமணியில் உள்ள பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா வளாகத்தில் உலக பத்திரிகை சுதந்திர நாள் விழா கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை அமெ ரிக்க துணை தூதரகம் மற்றும் பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா…
நாளை வெளிவருகிறது! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு
சென்னை, மே 9- கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்ட மிட்டபடி நாளை (10.5.2024) காலை வெளி யாகிறது. தேர்வு முடிவுகள் உடனடியாக அந்தந்த மாணவர்களின் அலை பேசிக்கு குறுந்தகவல் சேவை மூலம் அனுப்பி வைக்கப் படும்…
ரஷ்யாவில் மருத்துவம் – உயர்கல்வி பயில கல்விக் கண்காட்சி: தமிழ்நாட்டில் மே 11 முதல் 17ஆம் தேதி வரை நடக்கிறது
சென்னை, மே 9- ரஷ்யாவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்காக, அந் நாட்டு பல்கலைக் கழகங்கள் சார்பில் ரஷ்ய உயர்கல்வித்துறை மற்றும் ஸ்டடி அப்ராட் எஜு கேஷனல் கன்சல்டன்ட் சேர்ந்து தமிழ்நாட்டில் கல்விக் கண் காட்சியை நடத்த உள்ளன. இதுகுறித்த…
உலோகக் கழிவுகளை உண்டு அழிக்கும் பாக்டீரியா
சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருக்கும் தொழிற்சாலை கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள் ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் தொழிற்சாலை கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் செப்பு எனப்படும் தாமிரம், தொழிற்சாலைகளில் அதி களவில் பயன்படுத்தப்படுகிறது. செப்பு…
உடலில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்!
கடந்த பத்தாண்டுகளைவிட, அடுத்த பத்தாண்டு களுக்கு, ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நுண்கிருமிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்கு, புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகியிருக்கின்றனர். இருந்தாலும், நோய் எதிர்ப்பு அணுக்களை வெளியில் தேடுவதைவிட, மனித உடலுக்குள்ளேயே தேடலாம்…
ஹைட்ரஜனால் பறக்கும் விமானம்!
பெட்ரோலியத்திற்கு அடுத்து, மின்சாரம்தான். என்றாலும், இடையில் ஹைட்ரஜன் முயற்சித்துப் பார்க்கிறது. அதற்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்கும் என்று வல்லுநர்கள் சொல்கின்றனர். ஜீரோ ஏவியா என்ற நிறுவனம், 76 பேரை ஏற்றிச் செல்லும் ஹைட்ரஜன் விமானத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விமானத்தை…
சமையல் பணி செய்யும் நவீன ரோபோ
சில ஆண்டுகளுக்கு முன் மீசோ ரோபோடிக்ஸ், தன் ‘பிளிப்பி’ என்ற சமைக்கும் ரோபோவை அறிமுகப்படுத்தி அசத்தியது. சுறுசுறுப்பாக பர்கர்களை செய்து பரிமாறும் தட்டில் வைப்பதில் கில்லாடி இந்த பிளிப்பி. தற்போது மீசோ ரோபோடிக்ஸ், பிளிப்பி 2 என்ற புதிய மாடல் சமையல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.5.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை குறித்து நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு. "3 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நாற்காலி ஆட்டம் காண தொடங்கியுள்ளது. இதையடுத்து தனக்கு நெருக்கமான நண்பர்களையே மோடி தாக்க ஆரம்பித்து விட்டார்.…
