சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த உறுப்பினர்களின் கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க உரை
சட்டமன்றத்தில் இன்று! சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (25.6.2024), திருநெல்வேலி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு, திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட்…
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழிப் பயிற்சி தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, ஜூன் 25- செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள் ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழிகளில் இலவசமாக பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின்…
ஒன்றிய அரசின் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் குறித்து கார்கே விமர்சனம்
புதுடில்லி, ஜூன் 25- ஒன்றிய அரசு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக விமர் சித்துள்ளார். சமீபத்தில் நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வு களில் முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில்…
இருமூலை கிராமத்தில் பெரியார் பெருந்தொண்டருக்கு சிறப்பு
பெரியார் பெருந்தொண்டர் திருவிடைமருதூர் வட்டம் இருமூலை கிராமம் நாத்திகர். இலா .சுந்தரராஜன் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாளை (16.6.2024) முன்னிட்டு அவருக்கும் அவரது வாழ்விணையருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மீன்சுருட்டி நகர தலைவர்…
ஜூன் 25 (1931) சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள்
பத்தாண்டுகள் உறங்கிக் கிடந்த பிற்படுத்தப்பட்டோரின் உரிமைச் சாசனமான மண்டல் குழு பரிந்துரைக்கு, புத்துயிர் அளித்து, ஒன்றிய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27% இட ஒதுக்கீடு ஆணைப் பிறப்பித்தார். அதற்கான விலையாக பிரதமர் பதவியையும் துறந்த மாமனிதர். ”ஆயிரம் ஆண்டு பழைமை நிறைந்த…
பெரியார் விடுக்கும் வினா! (1356)
குழந்தைகள் பிறந்த பின் அவைகளையும், அரசாங்கத்தின் சொந்தச் சொத்தாகவே கருதி அரசாங்கம் அவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளைக் காக்க வேண்டுமே - அவர்களுக்குப் படிப்புக் கொடுக்க வேண்டுமே - அதற்குப் பின் வேலை தேடித் தர வேண்டுமே என்ற கவலை…
முதுபெரும் பெரியார் தொண்டர் காரைக்குடி ச.அரங்கசாமி மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
காரைக்குடி ஜூன் 25- காரைக்குடி கழக மாவட்ட மேனாள் தலைவர் ச.அரங்கசாமி 24-06-2024 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வுகள் வீர வணக்க கூட்டம் தலைமைக் கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர்…
“எங்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய முதலமைச்சர்!” நாமக்கல் மாவட்ட திருநங்கைகள் நெஞ்சார்ந்த நன்றி!
நாமக்கல், ஜூன் 25- திருநங்கைகளும் இந்த சமுதாயத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, முதல் மாநிலமாக “தமிழ்நாடு இந்தியாவிலேயே திருநங்கைகள் நலவாரியத்தை” 15-.4.-2008 அன்று தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டது. திருநங்கைகளின் நலன், சமூகப் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்…
காற்றில் வேகமாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், 27 முதல் 30ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…
பேராசிரியர் செலையன் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தருமபுரி ஜூன் 25- தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பயின்று அதே கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் செலையன் 23-6-2024 அன்று காலை 6 மணி அளவில் தருமபுரி இல்லத்தில் மறைவுற்றார். அவரது உடலுக்கு மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர்…
‘கேரளம்’ ஆக மாறியது கேரளா
திருவனந்தபுரம், ஜூன் 25- கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக ஒரு கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது அரசமைப்பின் ஒன்று மற்றும்…
பிஜேபியை எதிர்த்து மக்களவைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் போட்டி!
புதுடில்லி, ஜூன்25- மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை எதிர்த்து "இந்தியா" கூட்டணியின் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். மக்களவை தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி…
