இந்திய ராணுவத்தின் விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிக்கப்பட்டுள்ளது. திறமையும் தகுதியும் வாய்ந்த ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என விமானப்படை அறிவித்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய இந்தியாவின் முப்படைகளில் தற்காலிகமாக அக்னி வீரர்கள் என அழைக்கப்படும் ராணுவ வீரர்கள் அக்னி பத் திட்டத்தின் மூலம் இணைக்கப்படுகின்றனர். 17.5 வயது முதல் 21 வயது வரை கொண்ட இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டுமே இந்த பணியில் இணைக்கப்படுவார்கள்.
நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு சிறந்த திறன் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரர்கள் நிரந்தர பணியிலும், மீதம் உள்ளவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு சேவா நிதி தொகுப்பை பெறுவார்கள். முப்படைகள்விதிகளின்படி உடல் தகுதி தேர்வு மற்றும் பிற தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய விமானப் படையின் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு ஆள் சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” இந்திய இராணுவத்தின் விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர்வாயு 02/2027-க்கான ஆட்சேர்ப்பிற்கு இளையதளம் வாயிலாக விண்ணப்பங்களை வருகின்ற 26.07.2026 வரை பதிவு மேற்கொள்ளலாம்.
இணையவழித் தேர்வு 22.09.2026 மற்றும் 23.09.2026 அன்று நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தாம்பரத்தில் உள்ள 8 Airmen Selection Centre வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் www.iafrecruitment.edcil.co.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
