வினாத்தாள் கசிவு விவகாரம் ‘நீட்’ கலந்தாய்வு ஒத்திவைப்பு
புதுடில்லி, ஜூலை 7 மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. நீட் தொடர்பான வழக்கு வரும் 8ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதன் முடிவைத் தொடர்ந்தே…
இந்த ஆண்டு நடைபெற்ற ஊழல் மலிந்த ‘நீட்’ தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாதாம் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முரட்டு பிடிவாதம்
புதுடில்லி, ஜூலை 7 நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரி வித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் நாளை 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி…
பேச்சுத்திறத்தினால் அல்ல தலைமைத்துவத்தால்தான் தலைவனாகலாம்
இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி…
ரூ.1 லட்சம் கோடி வேண்டும் பெரும்பான்மை இழந்த பா.ஜ.க. மோடி அரசுக்கு சந்திரபாபு நெருக்கடி
புதுடில்லி, ஜூலை 7 18ஆவது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இழந்த பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மோடி மீண்டும் பிரதமர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.…
பிறவி பேதத்தை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்டது சுயமரியாதை இயக்கம்!
விஷத்திற்கு தேன் தடவிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.! பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி நடத்திய வரலாற்றுப் பாடங்கள்! குற்றாலம். ஜூலை 7, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் முதல் நாள் முற்பகலில், ‘நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்’ எனும் தலைப்பிலும், பிற்பகலில் ’இந்து…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியை தோற்கடித்து சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவீர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை, ஜூலை 6- விக்கிர வாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை தோற் கடித்து ‘சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதி விட்டிருப்பதாவது: விக்கிரவாண்டி மக்கள் அனை வருக்கும்…
உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘‘பிரிட்டனின் ’ஸ்ட்ராட்ஃபோர்ட் அன்ட் போ’ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண்மணியுமாகிய உமா…
தோழர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்
வள்ளியூர், ஏர்வாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நெல்லை மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் கழகத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். (5.7.2024) * ஏர்வாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை சட்டப் பேரவை மேனாள் தலைவர் ஆ. ஆவுடையப்பன் பொன்னாடை…
ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூக விரோதிகளால் நேற்று (5.7.2024) படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை யும், வேதனையையும் அளிக்கிறது. அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்புக் காட்டியதுடன், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை…
தமிழர் தலைவர் பாராட்டு
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்களின் மணநாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். (குற்றாலம், 5.7.2024) வெற்றிச்செல்வி பூங்குன்றன் அவர்களின் பிறந்த நாளை யொட்டி (6.7.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து…
