72,000 மாணவர்களின் திறன் பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்து
சென்னை. ஜூலை 31- 72 ஆயிரம் மாணவர்களின் திறன் பயிற்சிக்காக ரூ.82 கோடியில் 17 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தாகின. தமிழ்நாடு தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு அய்சிடி அகாடமி மற்றும்…
கே.ஜி.எஸ். இல்ல திருமண விழா
30.8.2024 புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் கே.ஜி.எஸ். இல்ல திருமண விழாவிற்கு மணமகனின் பெற்றோர் கே.ஜி.எஸ். தினகரன் கமலி & மணமகளின் பெற்றோர் பிச்சாண்டி தாட்சாயணி, கபிலன், கலா ராணி, நர்மதா, கே.ஜி.எஸ்.டி. சரத் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களிடம் திருமண அழைப்பிதழை வழங்கினர்.…
‘முற்போக்கு அறிவு மனிதர்க்குத் தேவை’ புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார்
திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதன் நிறுவன தலைவர் திராவிடதாசன் எழுதிய ‘முற்போக்கு அறிவு! மனிதர்க்குத் தேவை’ என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவுகள்
குழந்தைகள், பெண்கள் உட்பட 170 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் – மீட்புப் பணிகள் தீவிரம் வயநாடு, ஜூலை 31 கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 170 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடைமழை,…
வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 17ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ், காவல்துறை அதிகாரி வி. சந்திரா பங்கேற்பு
வெட்டிக்காடு, ஜூலை 31 வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகு லேஷன் பள்ளியில் 26.7.2024 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு 17 -ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள்…
‘‘நன்னன்குடி’’ நடத்திய நூல் வெளியீட்டு விழா, பரிசளிப்பு விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
நன்னன்குடி நடத்திய விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று புத்தகத்தை வெளியிட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கியும் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர்…
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் விடுதலை
ராமேசுவரம், ஜூலை 31- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழ்நாடு மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களுக்கு தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன், 5 படகுகளை அரசுடமையாக்கியும்…
அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உருளை வடிவ வடிகால் கண்டுபிடிப்பு
திருப்புவனம், ஜூலை 31- கீழடியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைமைவாய்ந்த மணிகள், கட்டட அமைப்புகள், தங்கத்திலான பொருட்கள் என ஏராளமானவை கண்டெடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து 10ஆம் கட்ட அக ழாய்வை,…
உள்நாட்டு விமானங்களில் தமிழ் மொழியிலும் அறிவிப்பு மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 31- உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்,…
தமிழ்நாட்டில் மருத்துவ கல்விக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்
சென்னை. ஜூலை 31- தமிழ் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவளழியில் விண்ணப்பிப்பது இன்று (31.7.2024) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்து வக் கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார்…
